பாகிஸ்தானில் நெய், சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு..!
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 213 ரூபாய் உயர்ந்து 605 ரூபாய்க்கும், நெய் விலை கிலோவுக்கு 208 ரூபாய் உயர்ந்து 555 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. Source link