இந்தியா சார்பில் இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல்

புதுடெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து அரிசி, பால் பவுடர், மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் இருந்து பல தவணைகளாக பெட்ரோல், டீசலும் அனுப்பப்பட்டது. கடந்த 21-ம் தேதி 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில், இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை..!

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார். இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில், பிஷப்கள்-பாதிரியார்கள், வாடிகனுக்கான உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கிறிஸ்துவ மத கடவுளின் தாய் என்றழைக்கப்படும் மேரி அன்னையிடம், வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி … Read more

சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி

ஷாங்காய் : சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர். நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் மக்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை … Read more

நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு – விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்

காத்மாண்டு: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது. நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தைத் தேடும் … Read more

மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.!

மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டிய  நிலையில், எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பலர் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.   Source link

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஓற்றையர் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், ரபேல் நாடல், ஜோகோவிச் ஆகிய இவரும் மோதினர். இதில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரபேல் நாடல், முன்னேறினார். பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை உயர்த்தியது அமைச்சரவை.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் வரிகளை அமைச்சரவை உயர்த்தியது. மதிப்புக் கூட்டு வரியை 18 சதவீதமும், பெருநிறுவங்களுக்கான வரியை  30 சதவீதமாகவும் உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 65 பில்லியன் இலங்கை ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் 4 கோடி கிலோ டீசல் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மேலும் நான்கு கோடி கிலோ டீசலை நேற்று அனுப்பி வைத்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அன்னியச் செலாவணி பற்றாக்குறை விலைவாசி உயர்வு எரிபொருள் கட்டுப்பாடு அத்தியாவசியப் பொருட்களுக்குதட்டுப்பாடு மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா இந்தாண்டு மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மார்ச் ஏப்ரல் மாதங்களில் 40 கோடி … Read more

போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார். இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார். நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு

01.06.2022 04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் … Read more