உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அனைத்து வகையிலும் முயற்சி – பெலாரஸ் அதிபர்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் இவ்வளவு நாள் நீட்டிக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் இந்த போரை பெலாரஸ் ஏற்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து, இம்மாத தொடக்கத்தில் பெலாரஸ் படைகள் ரஷ்ய படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டது குறித்து பேசிய அவர், … Read more

அடுத்த இலங்கையாகிறது துருக்கி: விலைவாசி 70% உயர்வு| Dinamalar

அங்காரா: துருக்கியில் உணவு, போக்குவரத்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டை விட தற்போது 70 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் விலைவாசி உயர்வு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. கோவிட் தொற்றால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் எரிபொருள் விலைகள் ஏற்றம் கண்டது, ஆகியவை உலகளவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியுள்ளன. நேற்று விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்க கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் 0.5 சதவீதம் வட்டி உயர்வை அறிவித்துள்ளது. … Read more

எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம்… சீனாவின் நோக்கம் என்ன?

பீஜிங், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் தென்பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் வானிலை மையம் ஒன்றை அமைத்தனர்.  இது உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம் ஒன்றை சீனா அமைத்து உள்ளது.  இந்த நிலையத்தில் இருந்து, தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டு சோதனை செய்து அதிலும் சீனா வெற்றி பெற்றுள்ளது. 2 ஆண்டுகள் வரை செயல்பட … Read more

உக்ரைனில் ஒரே இரவில் நிகழ்த்தப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் 600 வீரர்கள் பலி

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. நேற்றிரவு உக்ரைனின் ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ பலம் மிகுந்து காணப்படும் இடங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

கார்டன் பார்ட்டியை புறக்கணிக்கும் ராணி| Dinamalar

லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும். இந்நிலையில், உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் பிரிட்டன் ராணி எலிசபெத், கோடை கால ‘கார்டன் பார்ட்டி’யில் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் … Read more

ஈராக்கை தாக்கிய புழுதி புயல் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

பாக்தாத், உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெப்பத்துடன் சேர்த்து புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உள்பட 18 மாகாணங்களில் நேற்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால், வானம் முழுவதும் தூசி, மண்ணால் சூழ்ந்தது.  குறிப்பாக அந்நாட்டின் அன்பர் மாகாணத்தில் புழுதி புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. புழுதி … Read more

ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா!

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றனர், ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  சில இடங்களில் பறக்கும் தட்டை பார்த்ததாகவும், சில இடத்தில் ஏலியன் வந்து இறங்கியதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  ஆனால் இவை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் இன்றளவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் விஞ்ஞானிகள் … Read more

கால்பந்து அசுரன் மரடோனாவின் டி-ஷர்ட் ரூ.70 கோடிக்கு ஏலம்!| Dinamalar

மறைந்த அர்ஜென்டின கால்பந்து வீரர் மரடோனாவின் 1986ம் ஆண்டு போட்டியின் டி-ஷர்ட் ரூ.70 கோடிக்கு ஏலம் போயுள்ளது. விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கு இதுவரை கிடைத்ததிலேயே அதிகபட்ச விலை இதுவாகும். 1980களில் கால்பந்து உலகம் கொண்டாடிய நபர்களில் ஒருவர் மரடோனா. 1986ல் இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவில் நடந்த உலகப் கோப்பை போட்டிகளில் பங்கேற்றது. காலியிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட போட்டியில் மரடோனா தனிப்பட்ட முயற்சியில் 2 கோல் அடித்தார். அதில் ஒரு கோலை தனது தலையால் அடிக்க … Read more

"எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கலாம்"- பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!!

நியூயார்க், உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் … Read more

நீர்யானைகளால் அச்சத்துடன் வாழ்ந்து வரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு மக்கள்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆற்றில் உள்ள நீர்யானைகளுக்கும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக்குமான மோதல் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ருசிசி ஆறு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், புருண்டிக்கும் இடையே எல்லைக் கோடாக அமைந்துள்ளது. எப்போதும் நீர்வளம் நிறைந்துள்ள இந்த ஆற்றில் நீர்யானைகள் வாழ்ந்து வருகின்றன. ஆற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துப் பொதுமக்கள் வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வப்போது நீர்யானைகள் தாக்கியதில் பலர் உயிரிழந்ததால் ஆற்றங்கரை ஊர்களில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். Source link