உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவை உடைக்க முடியாதது – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள், அப்பாவி மக்களின் மரணங்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புடினின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். புடின் தனது நோக்கத்தை அடையமாட்டார் என்றும் சான்செஸ் தெரிவித்தார். புடினின் ஆட்சியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை ஆதரிப்பதே ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும் ஒரே வழி என்றும் தெரிவித்தார். Source link

என் ஆடைகளை விற்றாவது விலையை குறைப்பேன் – பிரதமர் அதிரடி!

தனது ஆடைகளை விற்றாவது குறைந்த விலைக்கு கோதுமை தருவேன் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், பொதுக் கூட்டம் ஒன்றில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: கைபர் பாக்துன்குவா மாகாண முதலமைச்சர் மம்மூத் கான், 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் … Read more

40 வயதிற்கு மேற்பட்டோரும் ரஷ்ய ராணுவத்தில் சேரலாம்.. அதிபர் புடின் அதிரடி

ரஷ்யாவில், 40 வயதிற்கு மேற்பட்டோரையும் ராணுவத்தில் சேர அனுமதிக்கும் அரசாணைக்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட வயது வரம்பு அகற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் என ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறதா; வெளியான பரபர தகவல்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தை  நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவும் பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் உள்ள முட்டுக்கட்டையைத் தீர்க்க ‘பேக் சேனல்’ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என ஊடக அறிக்கை ஒன்றில் அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி  தகவல் வெளியாகியுள்ளது.  எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து வருவதாகவும், 2019 ஆகஸ்ட் … Read more

நேபாள விமான விபத்து.. இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு – ஒருவரை தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நேபாளத்தின் தாரா ஏர்லைன்சுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் ஜோன்சோம் என்ற நகர் நோக்கி சென்றதுபோது விபத்துக்குள்ளானது. மஸ்டாங் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளதாகவும், எஞ்சிய … Read more

நேபாள விமான விபத்து; 16 பேரின் சடலங்கள் மீட்பு

நேபாளத்தில் நேற்று பொக்காரா என்ற  இடத்திலிருந்து 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகரை நோக்கி பயணித்த விமானம், நடுவானில் திடீரென மாயமானது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடி வந்த  ராணுவத்தினர், கோவாங் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதைக் கண்டறிந்தனர்.  சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவிற்கு விமானத்தில் பாகங்கள் சிதறியதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க … Read more

பொருளாதார நெருக்கடியால் கேரளத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்..!

வெளிநாடு செல்லும் இலங்கை விமானங்கள் எரிபொருள் செலவைக் குறைக்கத் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன. பொருளாதார நெருக்கடியால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் பெரும்பாலான நெடுந்தொலைவு விமானச் சேவைகளை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுத்திக் கொண்டது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரங்களுக்குச் செல்லும் சேவைகள் மட்டும் இலாபத்தில் இயங்குவதால் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் கொழும்பில் இருந்து இந்நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு திருவனந்தபுரத்தில் இந்திய விமானங்களுக்கு வழங்கும் அதே … Read more

Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து  இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி  திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று  அவர் விவரித்தார்.  இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா  பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது. உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால்,  லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம்  எடுத்துக் கொண்ட … Read more

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 79 பேர் பலி: பலர் மாயம்

பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது. இதுகுறித்து பிரேசில் மீட்புப் படையினர் தரப்பில், “பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மோசமடைந்துள்ளன. ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் இருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 79 பேர் இதுவரை பலியாகி … Read more

மரணிக்கும் தருவாயில் கரை ஒதுங்கிய திமிங்கலம்..

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகர் அருகே கடலில் இருந்து கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று மரணிக்கும் தருவாயில் கரை ஒதுங்கியுள்ளது. டவெர்னெஸ் டீ லா வல்டிக்னா பகுதியில் உள்ள கடலில் இருந்து கரையொதுங்கியுள்ள 12 மீட்டர் நீளமுள்ள அந்த திமிங்கலம் 25 டன் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கலம் இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதியன்று, கரையை ஒட்டி தென்பட்டுள்ளது. அப்போதே அது மிகவும் பலவீனமாகவும், முதுகுத் துடுப்பில் வெட்டுக்காயங்களுடனும் இருந்ததாக கடல்சார் … Read more