Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200 மில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜயசேகர் தெரிவித்தார். இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு உதவிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘இந்த கடன் வசதி மே மாதம் நான்கு சரக்கு எரிபொருளுக்கு … Read more

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அதிகாரங்களை கைமாற்றினாரா ரஷ்ய அதிபர் புதின்? – அமெரிக்க ஊடகங்கள் தகவல்

நியூயார்க்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க ஊடகச் செய்தியில், “புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் அதனை தள்ளிப்போட்டுவந்த நிலையில் தற்போது உடல்நிலை கருதி அந்த சிகிச்சையை உடனே மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் தனது அதிகாரங்களில் பாதுகாப்பு … Read more

சீனாவில் புதிதாக 368 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

சீனாவில் புதிதாக 368 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த 20 பேருமே ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு உணவங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. … Read more

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

கோபன்ஹேகன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.  இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உ றவை … Read more

'எங்களது வலிமைக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம்!' – அதிபர் பைடன் பேச்சு!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லாராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளிலும் நிலவும் வறுமை, வன்முறை, நோய் பரவல் காரணமாக இந்த நிலை உள்ளது. உலகம் முழுவதும் … Read more

மெட் காலா நிகழ்ச்சியில் தனது தாயுடன் பங்கேற்ற டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் மெட் காலா 2022 ஆடையலங்கார நிகழ்ச்சியில், உலக பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பங்கேற்றார். டுவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய பிறகு, அவர் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி இதுவாகும். கருப்பு நிற tuxedo சூட் அணிந்து வந்த எலான் மஸ்க், 74 வயதான தனது தாய் மேய் மஸ்க் உடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் … Read more

உக்ரைனின் ஒடிசா மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் பலி

உக்ரைன் ரஷியா இடையே நிலவி வரும் போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு நகரங்களில் அதிகளவில் தாக்குதல் நடத்த ரஷியா தனது படைகளை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் கருங்கடல் துறைமுகமான ஒடிசாவில் நேற்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர சேதத்தை சந்தித்தது. அப்போது குடியிருப்புக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலின் எதிரொலியால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும், 5 பேர் படுகாயமடைந்ததாகவும் … Read more

எதிரிநாட்டு போர்க்கப்பல்களை கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது சீன கடற்படை

எதிரிநாட்டு போர்க்கப்பல்களை கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை சோதனையை சீன கடற்படை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வூசி என்ற போர்க்கப்பலில் இருந்து YJ 21 ரக ஏவுகணை வீசப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை இது உறுதிபடுத்தப்பட்டால் உலகிலேயே போர்க்கப்பல்களை அழிக்கும் YJ 21 ஏவுகணைகளை கொண்டுள்ள முதல் நாடாக சீனா இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சீனா வெளியிட்ட வீடியோ அடிப்படையில், இந்த ஏவுகணை அதிவேகமாக … Read more

2 லட்சம் சிறுவர்கள் உட்பட 10 லட்சம் பேரை சிறை பிடித்த ரஷ்யா

கிவ்: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷியா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உக்ரைனை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறது. மேலும் நகரங்கள் மீது … Read more

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை துவம்சம் செய்த சூறாவளி; மனம் பதற வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி வீடுகள், கட்டிடங்கள் பெரும் சேதமடைந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டன. மரங்களை வேறோடு சாய்ந்ததோடு, வாகனங்கள், மின் கம்பங்கள் ஆகியவை தூக்கி வீசப்பட்டன. சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.  ட்விட்டர் பயனரான ரீட் டிம்மர், அமெரிக்காவின் கன்சாஸ் … Read more