பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!

பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25க்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லாரிகள் சேதமடைந்தன. தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து, பெரும் தீப்பிடித்ததில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில், அந்த 25 டேங்கர் லாரிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து … Read more

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு

கொழும்பு   இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை அரசு நாடி வருகிறது. அதேநேரம் தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழி தெரியாத ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இடைக்கால அரசு அமைக்காவிட்டால் இலங்கை … Read more

சீனாவில் பொலிவு இழந்த மே தின விடுமுறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் மே தின விடுமுறை கொண்டாட்டம் பொலிவு இழந்தது. நம் அண்டை நாடானா சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய் பீஜிங் நகரங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் மே தினத்தை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை நாட்களில் சீன மக்கள் சுற்றுலா செல்வர். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க சீனாவில் கட்டுப்பாடுகள் … Read more

உணவு திருவிழாவில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்… ஒருவர் பலி – 5 பேர் காயம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்மநபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஜாக்சன் நகரில் ஆண்டுதோறும் மட்பக் என்ற பெயரில் நடைபெறும் உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என தகவல்

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் கோத்தபயவுடனான சந்திப்பிக்கு பின் பேசிய மகிந்த ராஜபக்சே, 20வது சட்டத் திருத்தத்தின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபருக்கு உரிமை உள்ளதாகவும், அப்படி அதிபர் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் பிரதமரை நீக்கி இடைக்கால அரசை அமைக்குமாறு அதிபரை சந்தித்து எதிர்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாட்களில் இலங்கை அரசியலில் … Read more

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்

சிகாகோ  அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி உள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதேபோல்  பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  மொத்தம் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய ராணுவம் வெடிகுண்டு வீச்சு- 8 பேர் உயிரிப்பு, 11 பேர் காயம்

02.05.2022 04.50:  டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷிய படையினர் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் டொனெட்ஸ்கில் உள்ள லைமன் நகரில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்தததாகவும், அந்த பிராந்திய ஆளுனர் பாவ்லோ கைரிலெங்கோ தெரிவித்துள்ளார்.  03.30:  உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உக்ரைன், ரஷிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அசோவ்ஸ்டல்  உருக்காலையில் இருந்து … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்தது ரஷ்யா: ஒடேசா விமான ஓடுபாதையும் தகர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் … Read more

சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தார். ஹார்வார்ட் பல்கலையில் உயர் … Read more

எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த இலங்கை அதிபர் கோத்தபய முயற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ”அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து, நாட்டின் நலனுக்காக ஒன்று சேர வேண்டும்,” என, எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மகிந்த … Read more