"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" – கீவ் வாசிகள் போராட்டம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.  தங்கள் உறவுகள் மரியுபோலில் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: நீண்ட காலத்திற்கு கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த விரும்பும் ரஷியா..!!

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மே 01,  12.05 p.m நீண்ட காலத்திற்கு உக்ரைனின் கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த ரஷியா விரும்புகிறது: இங்கிலாந்து மாஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. புதிய அரசாங்கம் உக்ரைன் … Read more

ஆப்கன் பயணிகள் பேருந்து குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கனில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் மற்றும் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் பஸ்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் … Read more

எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கெய்ரோ, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை ஏற்றி கொண்டு ரிக்ஷா ஒன்று அவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரிக்சா வண்டி அந்நாட்டின் நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் வழியே செல்லும்போது, திடீரென அதில் கவிழ்ந்தது. இதில் ரிக்சாவில் பயணித்த 12 பேரில் 8 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  மீதம் இருந்த 4 பேர் உயிர் தப்பியுள்ளனர். ரிக்சாவை ஓட்டி … Read more

”சீனாவில் கொரோனா சமூக பரவல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” – ஷாங்காய் மாநகர நிர்வாகம்

சீனாவின் ஷாங்காயில் கொரோனா தொற்று பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், அது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று தடுப்பு பணியில், கூட்டாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஷாங்காய் நகர நிர்வாகம், அண்மைக்கால தொற்று பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் முதற்கட்ட முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே ஷாங்காயில் ஒரே நாளில் புதிதாக 788 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. Source link

உக்ரைன் போர்- அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பேர் வெளியேற்றம்

மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இன்று அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைனின் ஜப்போரிஜியா நகரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நம்புவதாகவும் வீடியோவில் பேசிய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. சபையின் திட்டமிடப்பட்ட … Read more

'வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதம் பாயும்!' – அதிபர் கிம் ஜாங் உன் வார்னிங்!

”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்” என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஆசியா நாடான வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, அந்நாட்டு அதிபர் கிம் … Read more

“பீனிக்ஸ் கோஸ்ட் தற்கொலை ட்ரோன்”களை உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சூசைட் ட்ரோன் என்ற அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை அமெரிக்கா வழங்குகிறது. கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தம் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா வழங்கும் ட்ரோன்களை அப்பகுதியில் உக்ரைன் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் பெயருக்கு ஏற்றார் போல் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என கூறப்படுகிறது. உக்ரைனுக்கு 121 ட்ரோன்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மிசிசிபி: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.     இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிசிசிபி நகரில் … Read more

7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று – பீதியில் பெற்றோர்கள்!

பாகிஸ்தானில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற ஒருசில நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு … Read more