சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் காரை தயாரித்துள்ள நெதர்லாந்து நிறுவனம்..!

மின்சார சார்ஜிங் இன்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி உள்ளது. லைட் இயர் ஒன் மாடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் கார் இயக்கத்திற்கு தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குகிறது. அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் தூரம் … Read more

நீண்ட கால அரசப் பணி பிரிட்டன் ராணி சாதனை| Dinamalar

லண்டன் : உலகிலேயே நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரசப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது, 96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசப் பணியில் இருந்த சாதனையை, 2015ல் புரிந்தார்.இந்நிலையில், உலகிலேயே மிக நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் … Read more

இலங்கையில் காற்றாலை திட்டம் | அதானி குழுமம் தேர்வானதற்கு பொறியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாகவழங்க இலங்கை நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. அதானிக்கு மின் உற்பத்தித் திட்டத்தை ஒதுக்கீடு செய்யவே சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்வதாக இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையெடுத்தே மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோவை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசார ணைக்கு அழைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தவிசாரணையில் ‘எதன் அடிப்படையில் 500 மெகாவாட் திட்டத்துக்கு அதானி … Read more

பெட்ரோலுக்கு கோட்டா இலங்கையில் அமலாகிறது| Dinamalar

கொழும்பு : பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து, வாரத்துக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இவற்றை விற்கும் நடைமுறையை அமல்படுத்த, நம் அண்டை நாடான இலங்கை முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இதனால் மின்சார உற் பத்தி நிறுத்தப்பட்டு, மின் வினியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.கடந்த பிப்ரவரியில் … Read more

எல்லையில் பதற்றம் ஏன்? சீன அமைச்சர் புலம்பல்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : ”லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்தியாவே காரணம்,” என, சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கி கூறினார். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில், நம் அண்டை நாடான சீனாவின் ராணுவ அமைச்சர் வீ பெங்கி பேசியதாவது:சீனாவை எதிர்ப்பதற்காக, ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்கா தலையீடு பன்முகத்தன்மை என்ற போர்வையில் தன் நலன்களை நிறைவேற்ற அமெரிக்கா துடிக்கிறது. எந்த … Read more

தங்களை எதிர்க்க ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சி – சீனா குற்றச்சாட்டு

தங்களை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்க், எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பன்முகத்தன்மை என்ற போர்வையில் பிற நாடுகளை அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறினார். தைவான் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், வெய் ஃபெங்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பெயரில் குழுவை … Read more

சுவரின் வழியாக துல்லியமாக பார்க்க உதவும் அதிநவீன கேமராக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள சுவர்கள் வழியாக பார்க்க உதவும் கேமராக்கள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த கேமரோ-டெக் நிறுவனம் உருவாக்கிய Camero-Tech Xaver 1000 எனும் கேமராக்கள் அடுத்த தலைமுறைக்கான நவீன கையடக்க, உயர்-செயல்திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியுள்ளது. இராணுவப் படைகள், சட்ட அமலாக்கத் துறையினர், புலனாய்வு பிரிவுகள் போன்றவற்றுக்கான செயல்திறன் இதன் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. Camero-Tech Xaver 1000 ஆனது 3D ‘சென்ஸ்-த்ரூ-தி-வால்’ திறனைக் கொண்டுள்ளது, இவற்றைக் கொண்டு 100 மீட்டர் … Read more

பாண்டா கரடிகளுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மக்கள்

சீனாவின் சோங்சிங் நகர உயிரியல் பூங்காவில் 6 பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக பூங்கா ஊழியர்கள், பாண்டா கரடிகளின் வசிப்பிடத்தை பிறந்தநாள் பேனர்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்தனர். மூங்கில் தண்டுகள், ஆப்பிள், தர்பூசனி, கேரட் உள்பட ஏராளமான கார் கனிகளால் அப்பகுதி மக்கள் தயாரித்து கொண்டு வந்த பிறந்தநாள் கேக்-களை பாண்டா கரடிகள் ஆர்வமுடன் உண்டு களித்தன. Source link

ரஷ்யாவில், புதிய பெயரில் இயங்கத் தொடங்கிய “மெக் டொனால்ட்ஸ்” உணவகங்கள்

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில் அதன் உணவகங்கள், வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற பெயரில் இன்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யா-வை விட்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது. ரஷ்யாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அலெக்சாண்டர் கோவர் அங்குள்ள 850 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்த காப்புரிமையை பெற்றார். தலைநகர் மாஸ்கோவில், முதல் உணவகத்தை திறந்து வைத்த கோவர், இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு … Read more

ஐ.நா. சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்… சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை!

சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் ஐநாவின் அதிகாரபூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளே உள்ளன. இந்த ஆறு மொழிகளை தவிர பிற மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அத்துடன் இதுதொடர்பாக ஐ.நா. பொதுசபையில் தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை … Read more