புறா மூலம் சிறையில் கஞ்சா கடத்தல்.. கண்டுபிடித்த போலீசார்

பெரு நாட்டின் சிறையில் கஞ்சாவை கொண்டு சென்ற புறாவினை காவல்துறையினர் பிடித்துள்ளனர். Huancayo சிறையில் சமீபத்தில் பெய்த மழையில் அங்கிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனைக் குடிப்பதற்காக புறா ஒன்று இறங்கிய போது அதன் கழுத்தில் சிறிய பெட்டி ஒன்று தொங்குவதை கண்ட போலீஸ் அதிகாரிகள் லாவகமாக பிடித்து சோதனை செய்தனர். அந்த பெட்டியில் 30கிராம் அளவுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு புறாவின் கழுத்தில் தொங்க விடப்பட்டிருப்பது தெரிய வந்தது. Source link

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; ரஷ்யா அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அங்குள்ள மரியுபோல் நகரின் இரும்பாலையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இரும்பாலையில் பதுங்கி இருந்த 2000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யா படைகளிடம் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் இரும்பாலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் … Read more

இதுவரை தோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.!

இதுவரை தோல்வியே சந்திக்காத ஜெர்மன் நாட்டு குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவரான மூசா யாமக் ஐரோப்பா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில், இரண்டாவது சுற்றில் சரமாரியாகத் தாக்கப்பட்ட மூசா யாமக், மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும் போது நிலைகுலைந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூசா … Read more

200 மீட்டர் நீச்சல் போட்டியில் புதிய உலகச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்.!

ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஐசக் குக் 200 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 5 நொடிகளில் நீந்திக் கடந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஐசக் குக். இவர் வியாழனன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசியச் சாம்பியன் போட்டியில் உலகச் சாதனை படைத்தார்.  Source link

வரம்பை மீறும் பெண்களுக்கு மட்டுமே வீட்டு சிறை: தாலிபான்களின் புதிய ஆணை

பெண்கள் உரிமைகள் குறித்து பேசியுள்ள தாலிபான்கள், தங்கள் ஆட்சியில் வரம்பை மீறும் பெண்கள் மட்டுமே  வீட்டு சிறையில் வைப்போம் எனக் கூறியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும்  வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கவலைகளை வெளியிட்ட நிலையில், இப்போது பெண் உரிமைக்கு நாங்கள் எதிரி அல்ல என்பது போல் பேசியுள்ளனர். இப்போது புதிய ஆணையை வெளியிட்டுள்ளனர். தாலிபான் தலைவர் … Read more

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – இந்தோனேசிய அதிபர்

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 23 ஆம் தேதி முதல் விலக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியா நிறுத்தியதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசிய அரசின், இந்த முடிவைக் கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது 60 லட்சம் டன் பாமாயில் … Read more

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார். பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். … Read more

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்.. ரஷ்யா அறிவிப்பு

மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தை ரஷ்யா திறந்தது. அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் (Novoazovsk) நகரில் வெளி உலகத் தொடர்பின்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள 80 வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ஓட்டை குடையின் விலை ஒரு லட்ச ரூபாயா? கதறும் சீனர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது. ஆடம்பர பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்த ஆண்டு சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை 36 சதவீதம் கூடியது. அடுத்த … Read more

மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து மிக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தப்பவில்லை. ஏர்கேப் ஹோல்டிங்ஸ … Read more