உலக செய்திகள்
எம்.பி., பதவி ராஜினாமா மாஜி நிதியமைச்சர் அதிரடி| Dinamalar
கொழும்பு:இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்நாடு திணறுகிறது.இதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் … Read more
பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு| Dinamalar
லண்டன்:பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 176 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நாட்டு அரசு, இந்தாண்டு மார்ச்சில் பெட்ரோல், டீசல் வரியை குறைத்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, … Read more
பரிசோதனை கருவிகள் விற்பனை முறைகேடு: சுகாதாரத் துறை அமைச்சர் கைது!
கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையே வாட்டி வதைத்து வந்தது. பொதுமுடக்கம், தடுப்பூசி என உலக நாடுகளின் தொடர் நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் கொரோனா கருவிகள் விற்பனை விவகாரம் வியாட்நாமில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டின் ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் விற்பனை செய்தது. அந்த கருவியின் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு … Read more
3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து பூமிக்கு வந்த ரேடியோ சிக்னல்
பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து (Galaxy) வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வேறொரு விண்மீன் மண்டலத்திலிருந்து இவ்வாறான ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவது இது இரண்டாவது முறை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ரேடியோ சிக்னலை FRB 20190520B என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.2019-ஆம் ஆண்டு மே மாதம், சீனாவில் உள்ள குய்சோவில், அபெர்ச்சர் ஸ்பெரிகல் ரேடியோ டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் இந்த சிக்னலை … Read more
பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய கழுகுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் வைரல்
பாராகிளைடிங் சாகசம் செய்யும் ஒருவர் தான் பழக்கப்படுத்திய கழுகுடன் இணைந்து பாராகிளைடிங் செய்த காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கறுப்பு நிறத்தில் உள்ள அந்த கழுகு வானில் பறந்தபடியே தனது வேகத்தை குறைத்து லாவகமாக பாராகிளைடிங்கில் இறங்குகிறது. பின்னர் அந்த கழுகுவும் பாராகிளைடிங்கில் அமர்ந்தபடி வானில் பறக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த பாராகிளைடிங் காட்சிகள் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்| Dinamalar
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹிந்து கோவிலில் மர்ம நபர்கள் சிலைகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவ்வபோது ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், ஹிந்து கடவுள் சிலைகள் சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் இருக்கும் ஸ்ரீமாரிமாதா கோவிலுக்குள் வந்த மர்ம நபர்கள், அங்கிருக்கும் கடவுள் சிலைகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது அப்பகுதி ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து … Read more
‘அம்மா சொன்னது கதை அல்ல…’ – உக்ரைனின் மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த WWE நட்சத்திரம் ஜான் சீனா!
உக்ரைன் – ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தனது 19 வயது மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து ஊக்கம் கொடுத்துள்ளார் WWE நட்சத்திரம் ஜான் சீனா. இந்த உருக்கமான சந்திப்பு குறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது WWE. WWE நட்சத்திர வீரரும், நடிகருமான ஜான் சீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது ஆட்ட முறை மற்றும் அவரது துடிப்பான செயல்பாட்டை பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். சீனா ரிங்கிற்குள் என்ட்ரி கொடுக்கும்போது … Read more
மேகாலயா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை ; பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்
மேகாலயா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மரப்பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்த நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், கேரோ மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் இரு ஊர்களை இணைக்கும் மரப்பாலம் அடித்து செல்லப்பட்டது. Source link
வரலாறு காணாத போராட்டம்: இம்ரான்கான் எச்சரிக்கை| Dinamalar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி பேரணியும் இம்ரான் நடத்தினார். இந்த நிலையில், … Read more