வட கொரியாவில் 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதி.. மருந்து, மாத்திரைகள் விநியோக்கிக்கும் பணியில் ராணுவம் தீவிரம்..!

வட கொரியாவில் கொரோனா தொற்றில் இருந்து 6 லட்சம் பேர் குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பொது மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகிக்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா பணிகளை பார்வையிடும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டு உள்ளது. போதிய மருத்துவ வசதிக் குறைவால் கணக்கில் காட்டப்படும் அளவை … Read more

வரும் 2 மாதம் கடினமான காலம், சவால்களை சந்திக்க மக்கள் தயார் நிலை.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை.1

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 லட்சம் டன் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வருவிருக்கும் இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிக கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். 15 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு … Read more

ஈராக்கை 8-வது முறையாக தாக்கிய புழுதிப் புயல்.. செந்நிறப் போர்வையால் மூடியது போல் காட்சி..!

ஈராக்கில் கடந்த சில நாட்களில் 8வது முறையாக வீசும் புழுதிப் புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் பாக்தாத் உள்பட பல்வேறு நகரங்கள் செந்நிற போர்வை கொண்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் சுவாசக் கோளாறு, சருமப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார நலன் கருதி பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பாக்தாத் விமான நிலையத்தில் … Read more

ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்

கிங்ஸ்டன்: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.  அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா்.  மேலும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறாா்.  ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் … Read more

இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது என்று கூறினார்.  1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்படும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார். கொழும்பில், நகரத்தின் மிகவும் பிரபலமான போக்குவரத்து சாதனமான ஆட்டோ ரிக்ஷாக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக … Read more

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்.!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும்-பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Source link

இந்தியா – நேபாளம் இடையே 6 ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா முன்னிலையில் கையெழுத்து

லும்பினி: கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா – நேபாள நாடுகள் இடையே நேற்று 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். அதன் பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். … Read more