குடியிருப்புகளை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. வீடுகளை விட்டு வெளியேறி முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!
கிரீஸ் வூலா பகுதியில் குடியிருப்புகளை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயில் திரளான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் மலைப் பகுதிகளை சுற்றி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். 130க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 6 விமானம் மற்றும் 4 ஹெலிகாப்டர்களை கொண்டு தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Source link