அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு – மே17-ந் தேதி விசாரணை

வாஷிங்டன், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, விமானப்படை வீரர்கள் பலர் வானிலை சில மர்மமான பறக்கும் தட்டு வடிவிலான விமானங்களை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அவை உளவு விமானங்களாக இருக்கலாம் என அப்போது நம்பப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து அமெரிக்காவில் சாமானிய மக்கள் பலர் இது போன்ற பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக சாட்சியம் அளித்தனர்.  இது தொடர்பான புகைப்பட சாட்சியங்களையும் பலர் போலீசாரிடம் சமர்ப்பித்தனர். அவற்றில் பெரும்பாலானவை வானில் பறக்கும் பலூன்களாகவும், பாராசூட்களாகவும் இருந்தன. இருப்பினும் சில … Read more

அதிபருக்கு எதிரான போராட்டம்இலங்கை பிரதமர் ஆதரவு| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு, புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தன் ஆதரவை தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, ஏப்., 9 முதல் பிரதமர் அலுவலகம் அருகே பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் மீது முன்னாள் பிரதமர் … Read more

கொரோனா… தக்காளி வைரஸ்… இப்போ குரங்கு அம்மை.. போதும்டா சாமி!

சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபருக்கு கடந்த வாரம் (மே 7) குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து விமான பயணத்தின்போதும், நாடு திரும்பிய பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க உரிய சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லண்டன் மாநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 7ம் … Read more

சீனாவில் உருவாக்கப்பட்ட ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாய கப்பல்.!

சீனாவில் உருவாக்கப்பட்ட ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாய கப்பல்  9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. எவரெஸ்ட் சிகரத்தில் 4,300 மீட்டர் உயரத்தில் உள்ள தளத்தில் இருந்து வினாடிக்கு 30 மீட்டர் வேகத்தில் மேல் நோக்கி சென்ற அந்த மிதக்கும் ஆகாய கப்பல், 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தை எட்டியது.   அங்கிருந்தபடி, மிதக்கும் கப்பலின் மீது பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி வளிமண்டல வாயுக்கள் குறித்தும், வானில் … Read more

3 நாளில் 8 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: தவிக்கிறது வட கொரியா

சியோல்: வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் … Read more

பாக்.,ல் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை| Dinamalar

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம்

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலில்,  உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, பின்லாந்துக்கு வழங்கி வந்த … Read more

பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பலி..

பாகிஸ்தானில், ராணுவ வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா என்னும் பகுதியில் உள்ள சந்தை வழியாக பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, உடலில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனத்தை நோக்கி நடந்து வந்த மர்ம நபர், திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார். இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 3 குழந்தைகளும் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்| Dinamalar

ரோம்: தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்தை சேர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், குமரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஷப்புகள், பங்கு தந்தைகள், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக … Read more