ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான … Read more

இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல!- பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல’’ என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் … Read more

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 … Read more

சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!

பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது. இந்த கத்தரிக்காயின் எடை 3.969 கிலோவாக இருந்தது. வழக்கமான கத்தரிக்காயைப் போல 12 மடங்கு பெரியதாக உள்ள இது கிட்டத்தட்ட வீட்டுப் பூனையின் அளவு ஆகும். இதுகுறித்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அந்நிறுவன அதிகாரிகள் … Read more

இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல: அதிபர் ட்ரம்ப் விதித்த வரி விவேகமான கொள்கை கிடையாது – அமெரிக்க பத்திரிகையாளர் விமர்சனம்

வாஷிங்டன்: ‘‘இந்​தியா பள்​ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேக​மான கொள்கை கிடை​யாது’’ என அமெரிக்க பத்​திரி​கை​யாளர் ரிக் சான்​சேஸ் விமர்​சனம் செய்​துள்​ளார். உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​தும் ரஷ்​யா​விடம் இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்​கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத​மாக உயர்த்​தி​னார். அதிபர் ட்ரம்ப் அறி​வித்த வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது எனவும், இதை நீக்க … Read more

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது. அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த … Read more

இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்

வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து டிரம்புக்கு பதில் அளித்தது. ஆனால் டிரம்ப் தொடர்ந்து அந்த கருத்தை தெரிவித்து வருகிறார். அதன்பின் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார். மோடியை தனது நண்பர் என்றும் இந்தியா தங்களது நெருங்கிய கூட்டாளி என்றும் கூறி வந்த டிரம்ப் திடீரென்று அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறினார். இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து … Read more

உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்

பார்சிலோனா: பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள் புறப்பட்டன. இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் இணைந்துள்ளார். இஸ்ரேல் கடற்படையின் தடையை தகர்த்து காசா மக்களுக்கு உதவுவது இந்த பயணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த பயணம் பார்சிலோனாவில் தொடங்கிய போது ஆயிர கணக்கான மக்கள் திரண்டு, காசா புறப்பட்ட படகுகளை வழியனுப்பி வைத்தனர். அப்போது பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், … Read more

ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெர்லின், தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(ஆகஸ்ட் 31) ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற புகைப்படத்தை … Read more

டிரம்ப்பின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி … Read more