இலங்கையில் அமைதி திரும்புமா? புதிய பிரதமரை நியமிக்க கோத்தபய மும்முரம்!

இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.அதிபரை ரணில் சந்தித்துப் பேசியிருப்பதால் அவர் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். வரும் வாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக கூறினார். நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்க இடமளிக்கும் வகையிலான 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு … Read more

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன்- புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில சிக்கி தவிக்கும் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பொறுபேற்றுக் கொண்டார்.  அவரது தலைமையில் 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே,  பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முதல் நடவடிக்கையை தொடர்ந்து, விரைவில் முக்கியமான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.  … Read more

மாஜி அதிபருக்கு ரூ.85 லட்சம் அபராதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு| Dinamalar

நியூயார்க்:’அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 85 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினால், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு விலக்கிக் கொள்ளப்படும்’ என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் லெடிஷியா ஜேம்ஸ், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்டு டிரம்பின் தொழில் தொடர்பாக மூன்று ஆண்டுகள் புலனாய்வு நடத்தினார். இதன் முடிவில், டொனால்டு டிரம்ப் தன் நிறுவனங்கள், சொத்துக்கள், நிதி அறிக்கைகள் ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலியாக அதிகரித்து … Read more

அதிபருக்கு எதிராக இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் முடிவு

கொழும்பு, அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களால், தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர்.  இந்த கூட்டத்தில், அதிபருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவநம்பிக்கையை வெளிப்படுத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வரும் 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் … Read more

ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 2 பேர் பலி.. 14 பேர் காயம்..!

பிரேசிலின் பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். ஸ்கை டைவிங் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் இருந்து பொழுது போக்கிற்காக ஸ்கை டைவிங் செய்ய வீரர்கள் விமானத்தில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவிங் தொடங்கப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் இதுதான் முதல் விபத்து என அந்நகரின் … Read more

இலங்கையில் புதிய அமைச்சரவை? தமிழர்களுக்கு வாய்ப்பு?

கொழும்பு, இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்று புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அமைச்சரவை நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே, ராஜபக்சே  இருக்கும் ஆட்சியில் எந்த பதவியும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், தமிழ், இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ரணில் விக்கிரமசிங்கே … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை மாலை பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு … Read more

ஒரே நாளில் சட்டென்று சரிந்த கிரிப்டோகரன்சிகள்…பீதியில் முதலீட்டாளர்கள்..!

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு ஒரே நாளில் 27500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 14 சதவீதம் அளவுக்கு இறங்கியது. 10க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளன. யுஎஸ்டி காயினின் மதிப்பு ஒரு மாதத்தில் 97 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்து, ஒரு டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. … Read more

பால்வெளியின் கருந்துளை: வெளியானது முதல் புகைப்படம்!

நமது அண்டவெளியில் பல்வேறு ஆச்சர்யமான விஷயங்கள் நிரம்பியுள்ளது.  தற்போது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  இந்த தெளிவற்ற வண்ணமயமான புகைப்படத்தை எட்டு சின்க்ரனைஸ்ட் செய்யப்பட்ட ரேடியோ தொலைநோக்கிகளின் தொகுப்பான ஈவண்ட் ஹாரிஸான் தொலைநோக்கியின் வெளியிடப்பட்டது.   BIG BREAKING: First ever image of the black hole at the centre of our (Milky Way) galaxy! It’s called Sagittarius … Read more

உக்ரைன் போரைக் கண்டித்து ரஷ்யாவில் இருந்து வெளியேறி சீமென்ஸ் நிறுவனம்.!

உக்ரைன் மீது போர் தொடுத்ததைக் கண்டித்து ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளது. 1851 ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் இடையே தந்தித் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கச் சென்ற சீமென்ஸ் நிறுவனம் கடந்த 170 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்தது. தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த வருவாயில் ஒரு விழுக்காடு ரஷ்யாவில் இருந்து கிடைத்து வந்தது. ரஷ்யாவில் சீமென்சின் அதிவிரைவு ரயில் தயாரிப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் மூவாயிரம் பேர் பணியாற்றி … Read more