இலங்கையில் இன்றிரவு முதல் கடும் ஊரடங்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு, இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், இலங்கையில் இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. … Read more