இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நடைபெறும் அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. … Read more