கப்பல் மூலம் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு சென்றது

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவின் உதவியை அந்நாட்டு அரசு நாடியது. இந்தியா வந்த இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்தியா அறிவித்த கடன் வரம்புக்கு கீழ் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. அந்த கப்பல் இலங்கையில் உள்ள துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தியா அனுப்பிய டீசல் இன்று மாலை … Read more

பாக்., ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி| Dinamalar

கராச்சி; பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால்,அங்கு அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது.சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில், ஒரு பகுதியை திரும்பச் செலுத்தியதால், ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. கராச்சி; பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால்,அங்கு அரசியல் நெருக்கடி நிலவுகிறது.nsimg2998210nsimgஇந்நிலையில், ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… … Read more

கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து இதுவாம்: WHO கொடுத்த பகீர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா தொற்று உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இதனால் உலகெங்கிலும் ஏராளமான உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், சில பகுதிகளில் இன்னும் புதிய கொரோனா தொற்று பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், மக்கள் மற்றொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. பூச்சிகள் மூலம் தொற்றுநோய் பரவலாம் எங்கள் கூட்டாளர் வலைத்தளமான வியானின் அறிக்கையின்படி, … Read more

ரஷிய தாக்குதலால் சேதமடைந்த உக்ரைனின் கலாசார சின்னங்கள் – யுனெஸ்கோ வேதனை

பாரிஸ்: உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.  இதற்கிடையே, பெலாரஸ் மற்றும் துருக்கியில் இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் … Read more

6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது. இலங்கையில் அணை நீர் தேக்கம் வற்றியதால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மேலும் விலைவாசி உயர்வு மக்களை சிரமத்திற்குள் தள்ளியது. இந்நிலையில் அதிபர் ராஜபக்சே வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வன்முறையிலும் இறங்கினர். இலங்கைக்கு நட்பு ரீதியில் உதவும் வகையில் இந்தியா … Read more

இந்தியா மீது நேசம், என் மீது கோபம் ஏன்? – அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி

இஸ்லாமாபாத்: கடந்த பிப்ரவரி 23, 24-ம் தேதி களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இதன்காரணமாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இம்ரான் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. தற்போது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரநெருக்கடி எழுந்துள்ளது. இதையடுத்து இம்ரான்கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்பிக்களில் இம்ரான் கானுக்கு 140 … Read more

பெரு நாட்டில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பறவைகள் குணம் அடைந்தன

பெரு நாட்டில் கடலில் கலந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 39 பறவைகள் குணம் அடைந்ததால், அவை மீண்டும் கடலில் விடப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 15ந்தேதி அன்று லிமா கடற்பகுதியில் Repsol’s La Pampilla எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய 10ஆயிரம் பேரல் எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்தன. அதனால் பறவைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பறவைககளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரிய சிகிச்சை அளித்ததை அடுத்து குணம் அடைந்தன. இந்த நிலையில் … Read more

உக்ரைன்- ரஷியா போர் எதிரொலி: அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ரஷியாவுடனான அணுசக்தி பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா தனது மினிட்மேன் 3 என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க விமானப்படை கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் ஆன் ஸ்டெபனெக் கூறியதாவது:- எல்ஜிஎம்-30ஜி மினிட்மேன் 3 ஏவுகணையின் வழக்கமான சோதனைப் பயணத்தை மார்ச் 2022-ம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரஷியா – உக்ரைன் இடையேயான படையெடுப்பின்போது தவறான தகவல்தொடர்புகளைத் தவிர்ப்பதற்காகவும், … Read more

அவசரநிலை பிரகடனம்: அடுத்தது என்ன? – இலங்கை நிலவரத்தின் 10 அண்மைத் தகவல்கள்

கொழும்பு: இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.2) அதிபர் கோத்தபய ராஜபக்சே,அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், … Read more

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

தமது உயிருக்கு ஆபத்து உள்ள போதும் தொடர்ந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். தம்மை அரசு அதிகாரத்தில் இருந்து நீக்க வெளிநாடு ஒன்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர் இந்த சதித்திட்டத்தில் எதிர்க்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினார். தம்மை விட்டு ஓடிப் போன கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர் அந்த கட்சிகளின் ஆதரவில் பெரும்பான்மை பலம் பெற்றாலும் ஆட்சி நடத்த முடியாது என்றார். இதை விட தேர்தலை நடத்தினால் … Read more