ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குமீது உக்ரைன் முதல்முறையானவான்வழித் தாக்குதல் நடத்திய தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை எதிர்த்து உக் ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் 37-வது நாளாக நேற்றும் நீடித்தது. உக்ரைனின் பல்வேறுபகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே … Read more

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 41 லட்சம் அப்பாவி மக்கள் வெளியேற்றம்

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 41 லட்சம் அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 6 வாரத்தை எட்டிய நிலையில் உணவு, உறைவிடம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் குழந்தைகள், பெண்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சொந்த நாட்டை விட்டு 41 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு சென்றதாகவும், அதிகபட்சமாக 24 லட்சம் பேர் போலந்தில் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏறத்தாழ … Read more

உக்ரைனுக்கு ரூ.2250 கோடி மதிப்பில் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு

உக்ரைனுக்கு மேலும் 2250 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தவும், உக்ரைனின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ராணுவத் தொகுப்பில் லேசர் ராக்கெட், ட்ரோன்கள், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், பாதுகாப்பு தொலைத் தொடர்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், தளவாட உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை வழங்க … Read more

இன்று முதல் ரமலான் நோன்பைத் தொடங்கின இஸ்லாமிய நாடுகள்

சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஆப்கான், குவைத், ஈராக், பாலஸ்தீனம், சூடான் ,ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்றிரவு ரமலான் மாதத்தின் பிறை காட்சியளித்ததையடுத்து அந்தந்த நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இந்தியாவில் இன்று இரவு பிறை தெரிவதைப் பொருத்து ரமலான் நோன்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக முதல் பிறை சவூதி அரேபியாவிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் தெரிய வரும். அடுத்த நாளில் இந்தியாவின் இதர பகுதிகள், பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலும் … Read more

கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்

வாடிகன் : கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அந்தப் பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். வாடிகனில் நேற்று அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியபோது, “நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன். கனடா … Read more

ஆஸ்கர் அமைப்பிலிருந்து வில் ஸ்மித் விலகல்| Dinamalar

வாஷிங்டன்: ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து, நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். ஆஸ்கர் மேடையில், காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்ததற்கு, ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், தனது பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்: ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து, நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். ஆஸ்கர் மேடையில், காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்ததற்கு, ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ரத்து

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர மினிட்மேன்வகை ஏவுகணை சோதனையை அமெரிக்கா ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி சோதனையை ரத்து செய்ததாக அமெரிக்க விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி ஏவுகணை சோதனையை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், அதிபர் புதின் அணுசக்தி அவசர நிலையை அறிவித்ததை அடுத்து … Read more

தென்கொரியாவில் நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்: 3 விமானிகள் பலி

சியோல் தென்கொரியா கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் போராடி வருகிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் விமானப்படையின் இரு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக நேற்று புறப்பட்டு சென்றன. இவ்விரு விமானங்களும் கேடி-1 பயிற்சி விமானங்கள் ஆகும். இவ்விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தலைநகர் சியோலில் இருந்து சுமார் 440 கி.மீ. தென்கிழக்கில் உள்ள சச்சியோன் என்ற இடத்தில் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு கீழே விழுந்து … Read more

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வியை தொடர அழைப்பு

சென்னை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வியைத் தொடரலாம் என்று அந்நாட்டின் முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலுவதற்கான வசதி வாய்ப்புகளை விளக்கும் விதமாக அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் மோனிகா கென்னடி, சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விசா 4 ஆண்டு நீட்டிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டில் 97 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி பயில … Read more

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. ஆட்சியை கலைக்க முயல்பவர்களை கைது செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு

இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார். கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருட்கள் இமாலய விலையேற்றம், பெட்ரோல்- டீசல், எரிவாயு விண்ணை முட்டும் அளவுக்கு விலையேற்றம், மின் தடை, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் நாடே கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய மக்கள் மிரிஹானவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். போலீசாருக்கும், பொது மக்களுக்கு … Read more