#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பின்னடைவு: செஞ்சிலுவை சங்கம் தகவல்

02.04.2022 04.10: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல்  சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 02.50: ரஷிய … Read more

இலங்கை அதிபர் மாளிகை இரவில் முற்றுகை அரசை கலைக்க கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்| Dinamalar

கொழும்பு:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது; 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதால், அரசை கலைத்து விட்டு, காபந்து அரசை அமைக்கும்படி அதிபர் கோத்தபயாவிடம், கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. நம் அண்டை நாடான இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், … Read more

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி … Read more

ரஷியா-உக்ரைன் இடையே காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியது

லிவிவ், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது காணொலி காட்சி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ரஷிய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி பேச்சுவார்த்தையின் படத்தை வெளியிட்டார்.  ரஷியா மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடந்த கடைசி சந்திப்பிற்கு பின் மூன்று நாட்கள் கழித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின்போது, ரஷிய தரப்பில், “கிரிமியா மற்றும் டான்பாஸ் பற்றிய ரஷியாவின் நிலைப்பாடுகள் … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: கோத்தபய ராஜபக்சே

இலங்கை: இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.2) அதிபர் கோத்தபய ராஜபக்சே,அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: ராஜபக்சே உத்தரவு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனம்செய்து அதிபர் கோத்தபயராஜபக்சே உத்தரவிட்டார். ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948ல் அண்டை நாடான இலங்கை சுதந்திரம் பெற்ற பின், அந்நாடுஇதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடிஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்து வருகின்றன. வரலாறு காணாத மின் வெட்டால்மக்கள் கடும் அவதிக்குஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது. பொறுமை இழந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் முற்றுகைபோராட்டத்தில்ஈடுபட்டனர். … Read more

வடகொரிய ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

வாஷிங்டன், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை ஆதரிப்பதற்காக ஐந்து நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் படைகள் தாக்குதல்| Dinamalar

கீவ்:உக்ரைனில், ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில், கதிர்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளனர். இதற்கிடையே ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் பிப்ரவரி 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில்,இருதரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந் நிலையில்,போரின் துவக்கத்தில் கைப்பற்றப்பட்ட,உக்ரைனின் … Read more