அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி பாய்ந்த மின்னல்.. பாதசாரி எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்

அமெரிக்காவில் கொட்டும் மழைக்கு மின்காந்த சக்தி மூலம் மின்னல் மீண்டும் வானோக்கி பாயும் அரிய நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மிஸ்சஸ்சபி, புளோரிடா, கான்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி மீண்டும் எழும்பிய அரிய நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது. உயரமான கட்டடத்தின் மின்காந்த சக்தியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவும் போது இதுபோன்ற அரிய … Read more

தீவிரவாத குழுக்கள் வன்முறையை தூண்டிவிட்டன: கோத்தபய ராஜபக்சே குற்றச்சாட்டு

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிபர் இல்லத்துக்கு செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர் குழு ஒன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியது. இரும்பு கட்டைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு அதிபர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் திட்டமிட்டு தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறை பின்னணியில் தீவிரவாத குழுக்கள் உள்ளன. சமூக ஊடகங்களை … Read more

பிரேசில் நாட்டில் 30 தொழிலாளர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 11 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் மலைச் சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பணியாளர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்சாலை நோக்கி சென்ற பேருந்து கனமழையின் காரணமாக சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 11 தொழிலாளர்கள் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.  Source link

மாறாத தாலிபான்கள்… மவுனத்தில் உலகம்!

ஆகஸ்ட் 15, 2021. ஆப்கானியர் அலற, உலகம் அந்த மக்களுக்காக பரிதாபப்பட்ட நாள். அன்றுதான் தாலிபான் தீவிரவாதிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். நாட்டின் தலைநகரான காபூல் நகரமும் அவர்கள் கையில் வீழ்ந்த நாள்! நாட்டிலிருந்து தப்பித்தால் போதும் என விமான நிலையத்தை நோக்கி மக்கள் ஓடினார்கள்; உள்ளூர் பேருந்தைப் போல விமானத்தைப் பாவித்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஏற முற்பட்டார்கள்; விமானத்தின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்ற சிலர், கீழே விழுந்து … Read more

உக்ரைன் சாலைகளில் கண்ணி வெடிகளை வைத்துச் சென்ற ரஷ்ய வீரர்கள்… அநாயசமாகக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்

உக்ரைன் சாலைகளில் ரஷ்ய துருப்புக்கள் போட்டு விட்டுச் சென்ற கண்ணி வெடிகளை உக்ரைன் வாகன ஓட்டுநர்கள் அனாயசமாகக் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. தலைநகர் கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற இடத்தில் ரஷ்ய வீரர்கள் சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் ஏராளமான கண்ணி வெடிகளை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அவ்வழியாக வரும் ராணுவ கவச வாகனங்களை அழிக்கும் வகையில் இந்தக் கண்ணி வெடிகளை வைத்திருந்தனர். இதனைக் கண்ட உக்ரைன் கார் ஓட்டுநர்கள் அந்தக் கண்ணி வெடிகளின் … Read more

தவறான தகவல்களை தருவதா: விக்கிபீடியாவை எச்சரிக்கும் ரஷ்யா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களுக்கு 4 மில்லியன் ரூபிள்(ரஷ்ய பணமதிப்பு) அபராதம் விதிக்கப்படும் என, தகவல் களஞ்சியமாக விளங்கும் ‘விக்கிபீடியா’ இணையதளத்திற்கு ரஷ்யா தொலைதொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக இணையதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்தவர்களை குறிவைத்து, உக்ரைன் மீதான ராணுவ … Read more

இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை: கடும் வன்முறை; கொழும்பு நகரில் ஊரடங்கு 

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு … Read more

அமெரிக்காவில் 3 மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளிகள்

அமெரிக்காவில் அலபாமா, லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல்கள் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மத்திய அலபாமா பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரொடு பெயர்ந்து விழுந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சூறாவளி காற்றில் சிக்கிய நடமாடும் வீடு ஒன்று அப்படியே தலைகீழாக நர்த்தனம் ஆடியது. பலத்த காற்று மற்றும் மழை … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிட்ட விவகாரம் – பெண் உள்பட 45 பேர் கைது

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.  மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.    இதற்கிடையே, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட … Read more

விபத்துக்குள்ளான விமானத்தின் 49 ஆயிரம் பாகங்கள் கண்டெடுப்பு| Dinamalar

பீஜிங் : சீனாவில் பயணியர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 49 ஆயிரம் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.நம் அண்டை நாடான சீனாவில் கடந்த 21ம் தேதி ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான உள்நாட்டு பயணியர் விமானம் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானம் சுக்குநுாறாக நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த 132 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் … Read more