ராணுவ தளபதியுடன் சந்திப்பு: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

போதை பொருள் கடத்தல் வழக்கு சிங்கப்பூரில் முதியவருக்கு துாக்கு| Dinamalar

சிங்கப்பூர்:போதை பொருள் கடத்தல் வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட, சிங்கப்பூரை சேர்ந்த 68 வயது முதியவருக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதை பொருள் தடுப்பு சட்டம் மிக கடுமையானது. போதை பொருள் பயன்படுத்துவோர் மற்றும் கடத்துவோருக்கு, அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.இதன்படி, போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூரை சேர்ந்த அப்துல் கஹர் என்பவருக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, மரண தண்டனைக்கு எதிரான சமூக ஆர்வலர் … Read more

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய லாக்டவுன்..!

பீஜிங், உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் 4-வது அலை, மெல்ல உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகமாக உள்ளது. கொரோனா முதன்முதலில் பரவ தொடங்கிய காலகட்டத்தில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இல்லையென்றாலும்,  சீனா முதல் அலையை சமாளித்துவிட்டதாக தெரிவித்தது.  உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது அலையில், டெல்டா வகை கொரோனா வைரசை சமாளித்துவிட்டதாக சீனா தெரிவித்தது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்து … Read more

உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி – வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்- ரஷியா பிரதிநிதிகள் இடையே நேற்று முன்தினம் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரில் போர் பகுதியில் இருந்து ரஷிய ராணுவத்தின் சில பிரிவுகள் வெளியேறும் என ரஷியா தெரிவித்தது. ரஷியாவின் இந்த உறுதிமொழியை உக்ரைன், அமெரிக்கா நம்ப மறுத்துள்ளன.   ரஷியா பின்வாங்குவது … Read more

இலங்கையில் மின் வெட்டு 10 மணி நேரமாக அதிகரிப்பு| Dinamalar

கொழும்பு-இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் வெட்டு நேரம், 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார வினியோகம் தடைபட்டு, தினமும் ஏழு மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தது.இந்நிலையில், … Read more

செஞ்சிலுவை சங்க கட்டிடம் மீது ரஷியா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்,   உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவை சங்கம் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி … Read more

’கடவுளின் தூதர் கனவில் வந்து கொலை செய்ய உத்தரவிட்டார்’ – ஆசிரியை-ஐ கழுத்தறுத்து கொன்ற சக ஆசிரியை,மாணவிகள்

லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மத கடவுளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக பலர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த நபர் பாகிஸ்தானில் நடு சாலையில் தான் வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் அடித்து நடு சாலையில் எரித்து கொல்லப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி … Read more

இம்ரான் கான் ராஜினாமா செய்யமாட்டார், கடைசி பந்து வரை ஆடுவார்- பாக். அமைச்சர் திட்டவட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை (வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான எம்.க்யூ.எம்.-பி, அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது … Read more

உக்ரைனிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம்

நியூயார்க், கடந்த மாதம் பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், “நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து … Read more

சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஷாங்காய் 2 பகுதிகளாக பிரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய கண்காட்சி மையம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, நகரில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை படிப்படியாக மேற்கொள்ளும் வகையில் ஹுவாங்பூ ஆற்றை … Read more