உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. போர்க்களக் காட்சிகள்..! <!– உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. போர்க்களக் காட்சிகள்..! –>

உக்ரைன் மீது ரஷ்யப் படையினர் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு கிழக்கு என இரு புறமும் எல்லைகள் வழியாகத் தரைப்படையினரும், பீரங்கிப் படையினரும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் போர் நடைபெறும் நகரங்களில் இருந்து பாதுகாப்பான பிற நகரங்களுக்குச் செல்வதற்காகக் காரில் மக்கள் விரைந்தனர். இதனால் போக்குவரத்து … Read more

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன், நேட்டோ, ஜி7 நாடுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைவிதிப்பு

உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக ரஷியா மறுப்பு தெரிவித்து வந்தது. ஆனால், உக்ரைன் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக தீவிரம் காட்டியதால், ரஷியா கோபம் அடைந்தது. இதனால் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்தார். இதனால் போர் நிகழும் அபாயம் ஏற்பட்டது. ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சமாதானம் பேச முயற்சி செய்தனர். அமெரிக்கா … Read more

உக்ரைன் சரணடைந்து வருகிறது; ரஷ்யா தகவல்| Dinamalar

கீவ்: ‛தங்களது தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலால் உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்துவதால், உக்ரைன் படைகள் திணறி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனையடுத்து, லூகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய … Read more

Ukraine-Russia War: பொருளாதரத்தில் பூமரங்காக எதிரொலிக்கும் ரஷ்யாவின் தாக்குதல்

உக்ரைனின் மீதான தாக்குதல் நேரடியாக ரஷ்யாவின் பொருளாதரத்தில் எதிரொலிக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை, ராணுவ நடவடிக்கையை அறிவித்த உடனே, மாஸ்கோ எக்ஸ்சேஞ்சில் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. உக்ரைனுடனான மோதலின் உச்சகட்டமாக ரூபிள் மதிப்பு மிகவும் சரிந்தது. அது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்புகளுக்கு கீழே சரிந்ததால் ரஷ்ய பங்குச் சந்தை மூடப்பட்டது.  “அனைத்து சந்தைகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் தொடங்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என்று தகவல்கள் வெளியிடப்பட்டது. நேற்றைய பங்குச் சந்தை … Read more

உக்ரைனின் 100+ ராணுவ வீரர்கள் பலி | ’விமானப்படை தளங்களை அழித்துவிட்டோம்’ – ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ”உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை” என்று ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில், கடைசியாக ரஷ்ய … Read more

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் ராணுவம் தகவல்!

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் எண்ணெய் கிணறுகள், ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மீது ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. உக்ரைனில் உள்ள விமான தளங்கள், ராணுவ சொத்துக்கள் மீதே … Read more

உக்ரைனில் ATM, கடைகளில் அலைமோதும் கூட்டம்.! <!– உக்ரைனில் ATM, கடைகளில் அலைமோதும் கூட்டம்.! –>

உக்ரைனில் ATMகளில் பணம் எடுக்க நீண்ட வரிசை.! உக்ரைனில் கடைகளில் அலைமோதும் கூட்டம்.! பொழுது விடியும் முன் தாக்குதல் நடத்திய ரஷ்யா.! உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளோம் – ரஷ்யா உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில், ஏடிஎம்-களில் பணம் எடுக்க நீண்ட வரிசை உக்ரைனில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது உக்ரைன் மீது, இரவோடு, இரவாக, ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது பொழுது விடிந்த உடன், உணவு தேவைகளை … Read more

ரஷியாவுக்கான கருங்கடல் நீர்வழிகளை மூடுமாறு துருக்கியிடம் உக்ரைன் வேண்டுகோள்

ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷிய போர்க்கப்பல்களை போஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஆகிய கருங்கடல் நீர்வழியாக அனுமதிக்க வேண்டாம் என்று  துருக்கிக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தூதர் … Read more

பாதுகாப்பாக இருங்கள்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை| Dinamalar

கீவ்: உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி, அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உக்ரைனில் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது. இதனால், அனைவரும் தயவு செய்து அமைதியாக இருப்பதுடன், வீடு, ஓட்டல், விடுதி என எங்கு இருந்தாலும் அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். பல நகரங்களில் இருந்து கீவ் நகருக்கு செல்பவர்கள் மீண்டும், தங்களது இடங்களுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டும். மேற்கத்திய நாடுகளின் எல்லை பகுதியில் … Read more

Russia Ukraine News: ஆயுதங்களைக் கீழே போட வலியுறுத்தி ஆயுதமேந்தும் ரஷ்யா

ஐ.நா அவசரகால பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கையானது, கிய்வில் அதிகாரத்தில் உள்ள “அரசு ஆட்சியை” குறிவைத்ததிருப்பதாக  கூறினார். “உக்ரேனிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆக்ரோஷமாக செயல்படவில்லை, ஆனால் கிய்வில் அதிகாரத்தில் இருக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று ரஷ்ய தூதர் கூறினார். முன்னதாக, உக்ரைன் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும், டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை’ … Read more