அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 84. அவர் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டுள்ளார். நாங்கள் ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி, அத்தை மற்றும் நண்பரை இழந்துவிட்டோம் என்று டுவிட்டர் பதிவில் மேடலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் 1996 ஆண்டு  அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலாளராக மேடலின் ஆல்பிரைட்டை நியமனம் செய்தார். பில் கிளிண்டன் … Read more

சிறையில் தோழியை திருமணம் செய்து கொண்டார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்| Dinamalar

லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தனது தோழியை சிறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் 51, இவர் அமெரிக்க பாதுகாப்புத்துறை, சி.ஐ,ஏ குறித்த ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதள பத்திரிக்கை மூலம் அம்பலப்படுத்தியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது அமெரிக்கா, பல்வேறு பாலியல் வழக்குகளை பதிவு செய்தது. லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் 7 ஆண்டுகள் தங்கி இருந்தார். 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் … Read more

நேட்டோ அவசர கூட்டம்: ஜோ பைடன் பங்கேற்பு| Dinamalar

வாஷிங்டன் ; ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் நடக்கும், ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகளின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரசல்ஸ் சென்றார். ஜோ பைடன் புறப்படுவதற்கு முன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உக்ரைன் போர் தொடர்பாக, வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய, நேட்டோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் பிரசல்சில் நடக்கிறது. இதில், ஜோ பைடன் பங்கேற்றார். அப்போது, ரஷ்யா மீது மேலும் புதிய … Read more

விபத்துக்குள்ளான சீன விமான கறுப்பு பெட்டி கண்டெடுப்பு| Dinamalar

பீஜிங்:சீனாவில் சமீபத்தில் மலையில் விழுந்து நொறுங்கிய பயணியர் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் – 737’ உள்நாட்டு பயணியர் விமானம், குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் சமீபத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் சுக்குநுாறாக நொறுங்கி தீ பிடித்து எரிந்தது. ‘மிக கொடூரமான இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 132 பேரும் பலியாகினர்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், விமானத்தில் தகவல்களை பதிவு செய்யும் இரண்டு கறுப்பு பெட்டிகளில், … Read more

சிறையில் காதலியை கரம்பிடித்த விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

தமது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 50 வயதான அவர், 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக அவர் தங்கி இருந்தார். அப்போது 2011 ஆம் ஆண்டு அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு பழக்கம் நாளடைவில் காதலாக … Read more

சீன விமான விபத்து – ஒரே நாளில் 74 சதவீத விமான சேவைகள் ரத்து

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் ஒரே நாளில் சுமார் 74 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சோ நகரை நோக்கிச் சென்ற போது, மலைப்பகுதியில் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இரவு, பகலாக மீட்பு பணிகள் தொடரும் நிலையில் விமானத்தில் பயணித்த ஒருவர் கூட இதுவரை உயிருடன் … Read more

ரஷ்யாவுக்கு தற்காலிகமாக விமான சேவையை நிறுத்துவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ரஷ்யாவிற்கு வரும் 25-ம் தேதி முதல் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு விமானங்களை இயக்குவதற்கான வழிமுறைகள், தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவைகளை அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.  சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய நட்புறவுகளை கொண்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை வியட்நாம், ரஷ்யாவிற்கு கண்டனம் எதுவும் … Read more

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு

கீவ்: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர்  கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு  உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சண்டையில் ரஷிய ராணுவம் தரப்பில் இதுவரை … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்:ஜெலன்ஸ்கிக்கு நேட்டோ அழைப்பு…போரில் புதிய திருப்பம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மார்ச் 23, 21.30 உண்மையான அச்சுறுத்தல் இனிமேல் தான்; இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தலாம் – ஜோ பைடன் எச்சரிக்கை மார்ச் 23, 20.32 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.  தனது உரையின் போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.  … Read more