மோசடி வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

மாஸ்கோ : ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடந்த 2020-ம் ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்றார். இதில் இருந்து மீண்டு வந்த அவரை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், தனது ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளைக்கு … Read more

Ukraine under Threat: உக்ரைனில் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பரவியது காட்டுத் தீயா?

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பல இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக உக்ரைனின் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. செர்னோபில் அணு உலை அருகே காட்டுத் தீ ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ வெடித்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக்கோள் … Read more

ஒலியின் வேகத்தில் பாய்ந்து போய் மோதிய சீன விமானம்.. பரபர தகவல்

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்,மோதி விழுவதற்கு முன்பு ஒலியின் வேகத்தில் அதி வேகமாக பயணித்ததாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய இந்த சி 737-800 விமானத்தில் பயணிகள் உள்பட 133 பேர் இருந்தனர். விபத்துக்குள்ளான சமயத்தில் மணிக்கு 700 மைல்கள் என்ற வேகத்தில் இந்த விமானம் பறந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒலியின் வேகமாகும். இந்த வேகத்தில் போய் … Read more

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

கீவ்: ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை. புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும். நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் … Read more

கடும் பொருளாதார நெருக்கடி | இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பேப்பர் வாங்க முடியாததால் தேர்வுகள் நிறுத்தம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும். உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து … Read more

ரஷ்யாவை அழிக்க நினைத்தால்.. அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்.. கிரம்ளின் அறிவிப்பு

அணு ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தில் ரஷ்யா இல்லை. ஆனால் ரஷ்யாவை அழிக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டால் கண்டிப்பாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. ரஷ்யா தனது தாக்குதலை குறைப்பதாக இல்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உச்சகட்ட ஆயத்த நிலையில் வைக்குமாறு பிப்ரவரி 28ம் தேதி தனது படையினருக்கு அதிபர் புடின் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் போரில், … Read more

தைவானில் நிலநடுக்கம் – புதிய பாலம் இடிந்தது

தைபே: தைவான் தலைநகர் தைபேயில் இருந்து சுமார் 182 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அப்போது பொதுமக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நில அதிர்வை உணர்ந்த அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்தது. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையும் … Read more

திறந்த வேகத்தில் மூடப்படும் பள்ளிகள் – அரசு அதிரடி உத்தரவு!

பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை திறக்க வழங்கிய அனுமதியை சில மணி நேரங்களிலேயே அரசு திரும்பப் பெற்றுள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை … Read more

ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலால் உருக்குலைந்துள்ள உக்ரைனின் நகரங்கள்

ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலினால் உருக்குலைந்துள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருக்கும் காட்சிகளை உக்ரைன் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், Marinka பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலால் குடியிருப்புகள், பள்ளிக் கட்டிடங்கள், தேவாலயங்கள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன. Source link

மரியுபோல் நகரில் ரஷிய போர் விமானங்கள் ‘சூப்பர் பவர்’ குண்டுகள் வீசி கடும் தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இது 28-வது நாளாக நீடிக்கிறது. வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இருந்த போதிலும் ரஷிய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க … Read more