கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இனப்பாகுபாடு வழக்கு| Dinamalar

சிலிக்கான் வேலி கூகுள் நிறுவனம் அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பின ஊழியர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாகக் கூறி அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகுள் ஏப்ரில் கர்லி என்பவரை 2014ல் கருப்பின ஊழியர்களை நியமிக்கும் பணிக்கு அமர்த்தியது. பின் ஏப்ரில் கர்லியை 2020ல் கூகுள் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் மீது ஏப்ரில் கர்லி கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கூகுள் நிறுவன … Read more

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை| Dinamalar

மாஸ்கோ:ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடும் போட்டியாக உருவெடுத்தார். இவரை காபியில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் தேறிய இவர் ஒரு வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நவால்னிக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்துள்ளார். … Read more

ராணுவ பாதுகாப்புடன் பெட்ரோல் விற்பனை| Dinamalar

கொழும்பு:இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், மோதல் ஏற்படுவதை தடுக்க, ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், கச்சா எண்ணெய், வாகனம் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் சுட்டெரிக்கும்வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர். மூத்த குடிமக்கள் மூவர் பெட்ரோல் வாங்க ஆறு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்றதால் சுருண்டு விழுந்து இறந்தனர்.நீண்ட வரிசையில் இடையில் … Read more

சீன விமான விபத்து; பயணிகள் உடல் கிடைக்காத அவலம்| Dinamalar

வூஷாவ்: சீன விமான விபத்து நடைபெற்று 36 மணி நேரம் ஆகியும் பயணிகள் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று சீன மாகாணமான வூஷோவ் மாகாணத்தில் 132 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து கடந்த 36 மணி நேரமாக பேரிடர் மீட்புப் பணியினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.விமானம் விழுந்ததாக கூறப்படும் பகுதியில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டில் விமானத்தின் உதிரிபாகங்கள் ஆங்காங்கே கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் பயணிகளின் … Read more

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. அலைமோதும் மக்கள் கூட்டம்.. எரிபொருள் விற்பனை நிலையங்களில் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவு..!

இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த 3 முதியவர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் விற்பனை நிலையத்திலும் … Read more

விமான விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை – சீன அதிகாரிகள் தகவல்

பிஜீங்: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்தில் சிக்கியது.  அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.     குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் … Read more

சீனாவின் ஒவ்வொரு நகரங்களுக்கும் பரவும் கொரோனா ஷென்யாங் நகரில் ஊரடங்கு

பெய்ஜிங்:  சீனாவின் ஊகான் நகரில்  தான் கொரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டார். அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன.  தற்போது சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் … Read more

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் … Read more

ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். ஹிட்லரின் புஷென்வால், பெர்கென் – பெல்சன் உள்ளிட்ட வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவரான போரிஸ் ரோமன்சென்கோ (Borys Romanchenko) கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். கார்கிவ் நகரில் ரோமன்சென்கோவின் வீட்டை ரஷ்யப் படைகள் வீசிய வெடிகுண்டு தாக்கியதை அடுத்து அவர் உயிரிழந்ததாக குலேபா குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிட்லரிடம் இருந்து உயிர்பிழைத்த அவர் … Read more