அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: திணறும் தென்கொரிய மருத்துவமனைகள், தகன நிலையங்கள்

சீயோல்: தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா மரணங்களால், அங்குள்ள தகன நிலையங்களில் கூடுதல் உடல்களை தகனம் செய்யவும், உடல்களைப் பாதுகாத்து வைக்க அதிகமான குளிரூட்டிகளை ஏற்பாடு செய்யவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கொரியாவில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. தென்கொரியாவில் நாளொன்றுக்கு 1000 முதல் 1400 உடல்கள் வரையில் தகனம் செய்யும் அளவிற்கு நீண்ட நேரம் வேலைசெய்யும் வகையில் 60 நிலையங்களுக்கு சமீபத்தில் … Read more

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். நவால்னி தற்போது மாஸ்கோவிவன் கிழக்கே உள்ள சிறையில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினின் நீண்டகால எதிரியான நவால்னியை முடிந்தவரை சிறைக்குள் வைத்திருப்பதற்காகவே புதிய விசாரணை நடத்தப்படுவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நவால்னி மீது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் அதிகபட்ச சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

பொருளாதார தடை எதிரொலி: சூப்பர் மார்க்கெட்டில் சர்க்கரைக்கு போட்டி போட்ட ரஷியர்கள்- வைரல் வீடியோ

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபேச்சு இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷியாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடை எதிரொலியால் ரஷியாவில் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது. … Read more

‘‘இஸ்லாமிய வெறுப்பு வளர்கிறது; முஸ்லிம் நாடுகள் தடுக்க தவறி விட்டன’’- இம்ரான் கான் ஆதங்கம்

இஸ்லாமாபாத்: அமெரிக்க இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய வெறுப்பு வளர்ந்தது, ஆனால் இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஏற்கவில்லை என்பதை முஸ்லிம் நாடுகள் ஓங்கி ஒலிக்கத் தவறி விட்டதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான் பேசும்போது இதனை கூறினார். அப்போது அவர் கூறியதாவது: இஸ்லாம் சமயத்தில் மீதவாதம், தீவிரவாதம் என எதுவும் இல்லை. மதநம்பிக்கையில் தீவிரவாதத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பும் இல்லை. இஸ்லாத்தை … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் மக்கள் மீது ரஷிய படை துப்பாக்கி சூடு

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 27-வது நாளை தொட்டுள்ளது. உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல் நடக்கிறது. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உக்ரைனின் கெர்சன் நகரை ரஷிய ராணுவம் சமீபத்தில் … Read more

இங்கல்ல இலங்கையில் …! ஒரு கிலோ கோழி கறி ரூ.1,000, டீ ரூ.100, வடை ரூ.80

கொழும்பு இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை  உயர்ந்து கொண்டே வருகிறது. இலங்கையில் முட்டை மற்றும் கோழிக்கறியின்  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும், கோழிக்கறி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக … Read more

“இவை எல்லாம் தற்காலிகமானது என எண்ணினேன்.ஆனால்…” – எட்டாம் ஆண்டில் ஏமன் உள்நாட்டுப் போர்

“ஏமன் மக்கள் படும் வேதனை கற்பனை செய்ய முடியாதது. ஏமனில் மிருகத்தனமான மோதல்கள் தொடர்கின்றன; ஒவ்வொரு நாளும் அப்பாவி உயிர்கள் இழக்கப்படுகின்றன.” – ஐ.நா. சார்பாக ஏமனுக்கு மூன்று நாட்கள் பயணம் சென்ற ஏஞ்சலினா ஜூலி கூறிய வாக்கியம் இது. ”போரில் யாருமே வெற்றி பெறுவதில்லை” என்ற வாக்கியம் உள்நாட்டு போர்களுக்கு என்றும் பொருத்தமானதாகவே இருக்கும். உலகம் முழுவதும் ரஷ்யா – உக்ரைன் குறித்த போரை பேசிக் கொண்டிருக்கும் இதேவேளையில் ஏமனின் உள்நாட்டுப் போர் இந்த வாரம் … Read more

உக்ரைன் விவகாரம் – ஐ.நா.சபையின் அவசரகால சிறப்பு அமர்வு நாளை கூடுகிறது

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா 27வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷியப் படை  விடுத்த எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் … Read more

மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி| Dinamalar

கீவ்: உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போரால் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் கே.ஆர்.ஓ.கே.,- 2 தேர்வை ரத்து செய்து உக்ரைன் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் குறைவு என்பதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் சென்று சேர்கின்றனர். தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெறுவதால் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். தங்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்றத் தன்மையால் … Read more

சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

நேற்று, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஜெட் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் விழுந்து சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கூறியது.  எனினும் விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, … Read more