ஐ.நா., உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராக இந்தியர் நியமனம்| Dinamalar

நியூயார்க் : ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பிரச்னைகளில், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வரும் தலைமுறையினரின் நலன் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ‘பொது செயல் திட்டம்’ என்ற அறிக்கையை ஐ.நா., உயர்மட்டக் குழு உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையிலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் உள்ளிட்டோர் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ … Read more

வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் … Read more

சீனாவில் கரோனா அலை: தொழில் நகரில் திடீர் லாக்டவுன்; முடங்கிய 90 லட்சம் மக்கள்

பெய்ஜிங்: சீனாவில் ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் … Read more

"புடின் கிட்ட பேசி போரை நிறுத்தச் சொல்லும்மா".. குவியும் கோரிக்கை.. யார் இந்த அலினா?

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அலினா கபயேவா . இதையடுத்து அவரது தோழிகள் பலரும், உடனே அங்கிருந்து வெளியேறி புடினிடம் பேசி உக்ரைன் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். யார் இந்த அலினா கபயேவா?. 38 வயதேயாகும் அலினி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் காதலி ஆவார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். முன்னாள் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர். புடினின் ரகசியக் … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா.தகவல்

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள்.   இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி கூறுகையில், உக்ரைனில் … Read more

ரஷ்யாவை எதிர்க்க நடுங்கும் இந்தியா; ஜோ பைடன் விமர்சனம்| Dinamalar

வாஷிங்டன்: குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியா சற்று நடுக்கம் காண்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் இரு நாட்டுகளுடனும் நல்லுறவை பேண இந்தியா நடுநிலை வகிக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இந்தியா பொது ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா … Read more

ஏப்ரல் 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தீவு நாடான சமோவாவில், அண்மையில், பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி … Read more

18 வயது ஹிந்து பெண் சுட்டுக்கொலை| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், 18 வயது இளம் பெண் நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளமால் உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சிந்து மாகாண அரசு சட்டம் கொண்டு வர முயற்சி … Read more

பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராடுவதைத் தடுக்க ராணுவத்தை நிறுத்திய இலங்கை அரசு

கொழம்பு: இலங்கையில் பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவப் படையினரை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி … Read more

6 மாடி.. ஒரு ஸ்விம்மிங் பூல்.. சூப்பரான ஸ்பா.. காத்திருக்கும் கப்பல்.. புதிரான புடின்!

மிகப் பிரமாண்டமான ஒரு சொகுசுக் கப்பல் இத்தாலியில் தயார் நிலையில் காத்திருக்கிறதாம்.. இதில் என்ன விசேஷம் என்று கேட்கறீங்களா.. இது ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்குச் சொந்தமான கப்பல் என்று கூறப்படுகிறது. அந்தக் கப்பலின் பாதுகாப்புக்கு ரஷ்ய உளவுப் பிரிவு அதிகாரிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புடினின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களை புடினின் எதிர்ப்பாளரும், கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான அலெக்ஸி நவ்லானிக்கு நெருக்கமானவர்கள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய … Read more