நீரின்றி அமையாது உலகு. இன்று உலக தண்ணீர் தினம்| Dinamalar

பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தண்ணீர்: பருவநிலை மாற்றம் என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் … Read more

அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நிலையில், அந்நாட்டின் அதிபர் புதின் குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். புதின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் பைடன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், பைடன் விமர்சனத்திற்கு ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷிய வெளியுறவுத்துறை … Read more

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவேண்டாம்- உக்ரைன் அதிபர்| Dinamalar

கீவ்: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவேண்டாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த 25 நாட்களாக போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் ரஷ்ய படைகள் ஹைபர்சானிக் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்று … Read more

132 பயணிகளுடன் சென்ற சீன விமானம், மலைப்பகுதியில் விழுந்து விபத்து.!

சீனாவில் 132 பேருடன் சென்றுக் கொண்டிருந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சோ நகருக்கு பயணமானது. 123 பயணிகள், இரு விமானிகள், ஏழு பணியாளர்கள் என மொத்த 132 பேருடன் இந்திய நேரப்படி காலை 10.40 மணிக்கு குன்மிங்கில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. … Read more

ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி – உக்ரைனின் உளவுத்துறை

கீவ் உக்ரைன் போர் காரணமாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷிய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன. இந்த நிலையில் ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்று  வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.  பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ் புதின் அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை … Read more

ரஷ்ய தாக்குதலின் கோரமுகம்: புதினின் போரை ’தாங்கும்’ உக்ரைன் குழந்தைகள்!

மரியுபோல்: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா பெயர் வைத்து அழைத்தாலும், புதினின் இந்தப் போர் தாக்குதலை உக்ரைனின் குழந்தைகளே சுமக்கின்றனர். இதற்கு சாட்சியாகி இருக்கின்றன, ரஷ்யத் தாக்குதலில் இருந்து தப்பித்து வருகையில், குண்டு வீச்சுக்கு ஆளாகி கை,கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் குழந்தைகளின் படங்கள். கையில் ஒரு மஞ்சள் நிற டிராக்டர் பொம்மையை வைத்தபடி, மருத்துவமனை விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் ஆர்டெம். மருத்துவமனை சிறப்பு செவிலியர்கள் … Read more

133 பயணிகளுடன் சென்ற சீன விமானம், மலைப்பகுதியில் விழுந்து விபத்து.!

சீனாவில் 133 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சோ நகருக்கு 133 பயணிகளுடன் புறப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10.40 மணிக்கு குன்மிங்கில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராவிதமாக குவாங்சி பகுதியில் உள்ள வூஷூ என்ற நகருக்கு … Read more

“ரஷியா மிகப்பெரிய போர்க் குற்றச்செயல்களை செய்து வருகிறது” – ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்!

பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்), உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷியா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் பேசினார்.     அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும்” என்றார்.  இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா … Read more

ஊபரில் கால் டாக்ஸி ஓட்டும் ஆப்கான் முன்னாள் நிதி அமைச்சர் : அப்போது பட்ஜெட் தாக்கல்… இப்போது குடும்ப சூழ்நிலையால் டாக்ஸி டிரைவர்

ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலிபன்கள் ஆட்சியை கைபற்றுவதற்கு ஒரு வாரம் முன்பாக தன் பதவியை ராஜினாமா செய்த அவர், அமெரிக்காவின் வாஷிங்டனில் வாழ்ந்து வரும் தன் குடும்பத்தாருடன் சென்று சேர்ந்தார். 4 குழந்தைகளுக்கு தந்தையான காலித் பயெண்டா, குடும்ப சூழ்நிலை காரணமாக கால் டாக்ஸி ஓட்டி வருவதாக தெரிவித்துள்ளார். … Read more

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக நீதிபதியாக ஒரு கறுப்பின பெண்!

வாஷிங்டன், அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றக உள்ளார். முன்னதாக கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.  அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், கறுப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க இன்று வாக்கெடுப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 100 உறுப்பினர்களைக் கொண்ட … Read more