கருங்கடலுக்குப் பக்கத்தில்.. "பொருளாதார ஹப்".. பக்கா பிளான்.. ரஷ்யாவின் சூப்பர் ஸ்கெட்ச்!

கருங்கடலுக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிக முக்கிய பொருளாதார கேந்திரமான ஒடேசா துறைமுக நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளது. விரைவில் ஒடேசா நகரம் ரஷ்யர்கள் வசமாகும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு பக்காவாக பிளான் போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறதாம் ரஷ்ய ராணுவம். உக்ரைனை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது ரஷ்யா. இதுவரை குட்டி குட்டி நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. பெரிய நகரங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு வைத்து கபளீகரம் செய்யக் காத்திருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் … Read more

இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது சீனா

கொழும்பு: இலங்கை இதுவரை இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாததால், மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு மேலும் அதிகமாகலாம். இலங்கை … Read more

எலான் மஸ்கின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் 19 வயது மாணவர்..!!

ஆஸ்டின், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவராக விளங்கும் இவர் ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இவரது தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் டுவிட்டர் கணக்கான எலான் ஜெட் தெரிவித்துள்ளது. இந்த டுவிட்டர் கணக்கை 19 வயதான ஜாக் … Read more

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, QUAD நாடுகள் கூறுவது என்ன!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.  இந்தியா ரஷ்யா உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘குவாட்’ நாடுகளின் கூட்டத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலியா இந்த விஷயங்களை கூறியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை ‘குவாட்’ நாடுகள் ஏற்றுக்கொண்டதாக … Read more

கீவ் வணிக வளாகத்தை இரவோடு இரவாக தகர்த்த ரஷிய படை- 8 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 26வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷியா, தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.  சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. இதில் பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு … Read more

132 பேருடன் சென்ற சீன போயிங் விமானம் விபத்து: ரேடாரில் இருந்து விலகிய கடைசி நிமிடங்கள்- நடந்தது என்ன?

பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு சொற்பமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் நடந்துள்ள மிகப்பெரிய பயணிகள் விமான விபத்து என்பதால் சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ரேடாரில் இருந்து விலகிய அந்த நொடி… – … Read more

133 பயணிகளுடன் நொறுங்கிய விமானம்… பதை பதைக்கும் வீடியாே!

சீனாவில், 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான சீனாவின், குன்மிங்கில் இருந்து, குவாங்சோவுக்கு 123 பயணிகள் உட்பட 133 பேரை ஏற்றிக் கொண்டு ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானம் இன்று புறப்பட்டது. விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மலை மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த … Read more

China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த கடைசி திக்திக் நிமிட வீடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்து நடந்த இடத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் குவிந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  மேலும் படிக்க | Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன … Read more

சூட்கேஸில் 28 மில்லியன் யூரோவுடன் எல்லையைக் கடந்த உக்ரைன் முன்னாள் எம்.பி.யின் மனைவி

புடாபெஸ்ட்: சூட்கேஸில் 28 மில்லியன் யூரோவுடன் எல்லையைக் கடந்த உக்ரைன் முன்னாள் எம்.பி.யின் மனைவி, உலகையே ஆச்சர்யத்தில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து மக்கள் அன்றாடம் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா, ருமேனியா என பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் போலந்து நாட்டிலும் அடுத்தபடியாக ஹங்கேரியிலும் அதிகம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஹங்கேரி எல்லையில் உக்ரைன் நாட்டின் முன்னாள் எம்.பி. கோட்விட்ஸ்கியின் மனைவி காத்திருந்தார். … Read more

ஆத்தாடி.. என்னா அடி.. உக்ரைன் செம உக்கிரம்.. உருக்குலைந்து போன ரஷ்ய வாகனங்கள்!

உக்ரைன் ராணுவம், ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக கொடுத்து வரும் பதிலடி, அதிரடியாக இருக்கிறதாம். இதனால்தான் ரஷ்யாவால் பெரிய பெரிய நகரங்களை இன்னும் பிடிக்க முடியவில்லையாம். உக்ரைன் மீதான போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கூட எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் கொடுத்து வரும் பதிலடி தொடர்பான பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் படையினருக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ … Read more