லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி
இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த … Read more