மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் … Read more

நேட்டோவில் இணைய இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை – ஜெலன்ஸ்கி

கீவ் : “நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை” என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்றாக உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்பது கூறப்பட்டது. உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து 14 நாட்களாக இன்றும் நீடித்து வருகிறது. … Read more

உக்ரைன் ராணுவத்தில் இந்தியர்கள்? -ரஷியா அதிர்ச்சி!

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து தங்களுக்கு தகவல் வரவில்லை-சர்வதேச அணுசக்தி முகமை

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு தகவல்கள் வருவது நின்றுவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. செர்னோபில் அணுமின் நிலையத்தை கடந்த வாரம் ரஷ்ய படை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அணுமின் நிலையம் செயல்பாட்டில் இல்லையென்றாலும், அங்கு வெளியாகும் கதிர்வீச்சு அளவு குறித்த புள்ளிவிவரங்களும், தகவல்களும் சர்வதேச அணுசக்தி முகமைக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது.  Source link

உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்களை அனுப்புகிறது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ தகவல்

ஒட்டாவா: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், உக்ரைனின் சில நகரங்களை கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷிய ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை பாதுகாக்க உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷமாக ரஷிய படைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளன. ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். உக்ரைன் … Read more

இந்தியா மீது தடை விதிப்பதா? அமெரிக்க எம்.பி., கடும் பாய்ச்சல்!| Dinamalar

வாஷிங்டன்:”நட்பு நாடான இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும்,” என, அந்நாட்டு எம்.பி., டெட் குருஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் ‘எஸ்-400’ ஏவுகணை சாதனத்தை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து ‘எஸ்-400’ ஏவுகணை … Read more

உக்ரைனில் ஜெலன்ஸ்கி அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை; ஆனால், உயிரி ஆயுதம் குறித்த விளக்கம் தேவை: ரஷ்யா

மாஸ்கோ: “உக்ரைனின் ஜெலன்ஸ்கி அரசை கவிழ்க்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், அமெரிக்க நிதி ஆதாரத்துடன் அங்கு நடந்து வந்த உயிரி ஆயுதத் திட்டம் (Bio Weapons) விளக்கமளிக்கப்பட வேண்டும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இன்று (மார்ச் 9) கூறியது: “ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜெலன்ஸ்கி அரசை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் ரஷ்யாவிற்கு இல்லை. … Read more

உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்களை வழங்க முன்வந்த போலந்து, அமெரிக்கா மறுப்பு

உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்களை பரிமாற்றம் செய்ய முன்வந்த போலந்து நாட்டின் திட்டத்தை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக தங்களது 23 மிக் 29 போர் விமானங்களையும் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிபிக்நியு தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக அமெரிக்காவிடம் பயன்பாட்டில் இருக்கும் போர் விமானங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக கருத்து … Read more

சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ஏன்? ரஷியா விளக்கம்

ஆம்ஸ்டர்டாம்: ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றபோது, ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார். இந்நிலையில், … Read more