நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு
ஆம்ஸ்டர்டாம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எச்.ஐ.வி. வைரசின் மிகவும் கொடிய மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ளனர். … Read more