"ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.." – வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட மக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது. மத்திய … Read more

ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதம்… மிரட்டும் Sejjil-2 ஏவுகணை – இஸ்ரேலுக்கு ரொம்ப ஆபத்து ஏன்?

Israel – Iran Conflict: இஸ்ரேலை குறிவைத்து ஈரான் அதன் சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை மூலம் நேற்று தாக்குதல் தொடுத்தது. இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய தாக்குதல் என்பதை இங்கு காணலாம். 

இஸ்ரேலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்கும் பணியை அந்த நாடு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய அமெரிக்க தூதரகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமானம் மூலம் வெளியேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ எத்தனை தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் கொண்டு … Read more

மியான்மரில் திடீர் நிலநடுக்கம்

நய்பிடாவ், மியான்மரில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.20 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.68 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை EQ of M: 3.7, … Read more

இஸ்ரேல் மருத்துவமனை மீதான ஈரான் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. ஈரானின் அராக் நகரில், அணு உலையில் பயன்படுத்தப்படும் கடின நீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்கு தாக்குதல் நடத்தப்போவதால், அருகில் வசிக்கும் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை … Read more

ஈரான்-இஸ்ரேல் மோதல்… ரகசிய தகவல்களை பரிமாறி கொள்ள ரஷியா-சீனா ஒப்புதல்

மாஸ்கோ, ஓராண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த பதற்ற சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் … Read more

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியாவின் ஈரான் ஆதரவுக் குரல்

தெஹ்ரான்: ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் இன்று ஏழாவது நாளை எட்டியது. இந்த நிலையில், வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் … Read more

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயம்!

டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி … Read more

இஸ்ரேல் மருத்துவமனையை நாங்கள் குறிவைக்கவில்லை: ஈரான் விளக்கம்

தெஹ்ரான்: ‘இஸ்ரேலின் ராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை’ ஈரான் விளக்கம் அளித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான இன்று (ஜூன் 19) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. 47 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல் அவிவ் நகரில் பங்குச் சந்தை கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், சொரோகா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் … Read more

இந்தியா – பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: ‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். … Read more