குழந்தை பராமரிப்பாளர் போர்வையில்… சிறுமிகளை காதலனுக்கு பாலியல் விருந்தாக்கிய இளம்பெண்

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டீகோ நகரில் வசித்து வருபவர் பிரிட்னி மே லையான் (வயது 31). ஆன்லைனில் தன்னை, குழந்தைகளை பராமரிக்கும் நபராக காட்டி கொண்டார். இதனை நம்பி, வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் வேறு சிலர் தங்களுடைய குழந்தைகளை இவரிடம் விட்டு, விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், 7 வயது சிறுமி லையானுடன் செல்லமாட்டேன் என அதன் தாயாரிடம் அழுதுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அந்த பெற்றோர் சிறுமியை மெல்ல விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. … Read more

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கொஹட் மாவட்டம் ஹரா ஹரி முகமது சை கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று சுற்றுலா சென்றனர். சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணியளவில் காரில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ரிஹி ஷினொ ஹெல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த காரை பைக்கில் வந்த நபர் இடைமறித்துள்ளார். பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டார். … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா … Read more

நான் அதிபராக இருக்கும் வரை சீனா அந்த காரியத்தை செய்யாது: டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது. இதனால் கிழக்கு ஆசியாவில் அவ்வப்போது பதற்றமான சூழல் காணப்படுகிறது. தைவானுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதால், சீனாவும் அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் … Read more

11 வயது மாணவனுடன் உறவு… பணம் கொடுத்து மறைத்த பெண் ஆசிரியர் – ஷாக் சம்பவம்

World Bizarre News: பெண் ஆசிரியர் ஒருவர் 11 வயது மாணவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாக். ராணுவத் தளபதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அந்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் … Read more

பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சில மாகாணங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மழையால் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . 74 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாகிஸ்​தானில் மழை, பெரு​வெள்​ளத்​தால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 344-ஆக … Read more

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம்

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு 11.05 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 13-ந்தேதி, ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. … Read more

வரலாற்றில் முதன்முறையாக… அமெரிக்காவில் 605 அடி உயர கோபுரத்தில் பறந்த இந்திய தேசிய கொடி

நியூயார்க், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் வரலாற்று நிகழ்வு ஓன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி, சியாட்டில் நகரின் தனித்துவம் வாய்ந்த ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. 605 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படுவது … Read more

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் … Read more