இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.3 ஆக பதிவு

ஜகார்த்தா: மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியில் 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.54 மணி அளவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியாவின் மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியை மையமாகக் கொண்டு இன்று மதியம் 1.54 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. 39 … Read more

ஜப்பான் மக்களுக்கு AI மூலம் ஆப்பு வைத்த எலான் மஸ்க்! என்ன விவரம்…

Elon Musk Warns Japan: ஜப்பானின் மக்கள் தொகை சரிவு உலகம் முழுவதும் கவலைக்குரியதாகியுள்ளது. இந்த பிரச்சினைக்கு AI தீர்வாக அமையலாம் என எலான் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார். அவரின் கருத்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.

அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

மாஸ்கோ: அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ரஷ்​யா​வுக்கு 50 நாள் காலக்​கெடு விதித்​தார் ட்ரம்ப். பின்​னர் இதை 12 நாட்​களாக குறைத்​தார். இதுகுறித்து ரஷ்ய முன்​னாள் அதிபரும் அந்​நாட்டு பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வரு​மான டிமிட்ரி மெட்​வ​தேவ் எக்ஸ் தளத்​தில், “ட்​ரம்​பின் ஒவ்​வொரு காலக்​கெடு​வும் போரை நோக்கி … Read more

காசா: டிரோன் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி; இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம்

காசா சிட்டி, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. 20 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். எனினும், போரை நிறுத்தி வைக்க போர்நிறுத்த ஒப்பந்தம் உதவியாக அமைந்தது. ஆனால், மார்ச் 1-ந்தேதியுடன் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு … Read more

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

சிட்னி, இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்த சண்டையுல் ஆயிரக்கணக்கானவர்களை உயிர் இழந்தபோதிலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில், ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே ஹமாஸ் தலைவர் சின்வார் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் … Read more

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு; ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

நியூயார்க், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாத்தது. குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு எனக்கூறியது. அத்துடன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க தயாராகி உள்ளது. அதேநேரம் சீனா, ரஷியா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அபாயத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக காசாவில் மக்களுக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையை ஏற்க முடியாது என … Read more

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: பாக்.ராணுவ தளபதி அடாவடி பேச்சு

வாஷிங்டன், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை” என்றார். மேலும், எதிர்காலத்தில் ‘இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் உலகின் பாதி நாடுகளை அழித்துவிடுவோம் என்ற தொனியிலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி … Read more

15 வயது மாணவி உடன் உடலுறவு… பெண் ஆசிரியர் கைது… சிக்கலான காதல் உறவு – சிக்கியது எப்படி?

World Bizarre News: 15 வயது மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் இருந்து அத்துமீறலில் ஈடுபட்ட 38 வயது பெண் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். 

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேற்கு துருக்கியில் 11 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்தனர். இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. பலிகேசிர் மாகாணத்தில் பல … Read more

இதைமட்டும் செய்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும்: நெதன்யாகு உறுதி

ஜெருசலேம், இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:- காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காசாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர … Read more