வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மரண தண்டனை! அதிர வைக்கும் உத்தரவு..
North Korea : வட கொரியாவில், வெளிநாட்டு படம் பார்த்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
North Korea : வட கொரியாவில், வெளிநாட்டு படம் பார்த்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
யாங்கூன்: மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் எதிர்ப்புப் படைகள் போராடி வருகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரக்கைன் மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகள் மீது 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை மியான்மர் ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியதாக ‘அராகன் ஆர்மி’ கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் பள்ளி விடுதிகளில் … Read more
மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையும் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் 3 சுற்றுகளாக நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று … Read more
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதில் தொடர்புடைய டெய்லர் ராபின்சன் (22), … Read more
World Bizarre News: ஆப்ரேஷன் தியேட்டரில் நோயாளியை பாதியில் விட்டு, செவிலியருடன் அருகில் இருந்து அறையில் மருத்துவர் ஒருவர் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் மேலாளராக கர்நாடகாவை சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி நிஷா மற்றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை உணவகத்தின் மற்றொரு ஊழியரான யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் (37) ஓர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு சென்ற நாகமல்லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். … Read more
வாஷிங்டன்: ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதவம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு மிகக் குறைவாக உள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் சில உறுப்பு … Read more
காத்மாண்டு: நேபாள நாட்டில் ‘ஜென் ஸி’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். இதனிடையே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா … Read more
மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சாட்கா கடற்கரை அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 39.5 கி.மீ. ஆளத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 3.3 அடி உயரம் வரை எழக்கூடும் என … Read more
புதுடெல்லி: பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயார்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது. பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான … Read more