‘சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ – பாக். ராணுவ தளபதி பேச்சு

வாஷிங்டன்: சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் சையத் அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டி.சியில், டம்பாவில் பாகிஸ்தானின் கவுரவ தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் பங்கேற்ற அசிம் முனீர், “சிந்து நதி இந்தியர்களின் … Read more

கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு; ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டுகள் சிறை

என்ஜாமினா, ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (வயது 41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்றது. இந்த கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார். இதனால் அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார். இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பிய வீரர்கள்

வாஷிங்டன், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி மற்றும் ரஷிய விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சுனிதா வில்லியம்ஸ் இருந்த க்ரூஸ்-9 குழுவை விடுவிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். க்ரூஸ்-10 திட்டத்தின் கீழ் சென்ற அவர்கள் கடந்த 5 மாதங்களாக அங்கு தங்கி இருந்தனர். அப்போது மனிதர்களின் … Read more

காஸாவில் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் கொலை – அதில் ஒருவர் தீவிரவாதியா?

Israel Gaza Attack: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் ஹமாஸ் உடன் தொடர்புடையவர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 கட்டிடங்கள் தரைமட்டம்; மீட்புப் பணிகள் தீவிரம்

இஸ்தான்புல்: வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 16 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 29 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவியும் இஸ்மிர் ஆகிய நகரங்கள் உட்பட துருக்கியின் மேற்கில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக இருந்த சிந்திர்கி … Read more

கார் விபத்தில் சிக்கிய கணவன்; குழந்தை போல கவனித்து கொண்ட மனைவி… உடல்நலம் தேறியதும் நடந்த அதிர்ச்சி செயல்

கோலாலம்பூர், மலேசியாவை சேர்ந்த பெண் நூருல் சியாஸ்வானி. 2016-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கினார். அப்போது இருந்து, அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பை நூருல் ஏற்று கொண்டார். கணவருக்கு டியூப் வழியே உணவு கொடுப்பது, குளிக்க வைப்பது, உடை மாற்றுவது என அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார். ஒரு குழந்தையை போன்று பராமரித்து வந்திருக்கிறார். 6 ஆண்டுகளாக நன்றாக கவனித்து கொண்டதில், கணவர் உடல்நலம் தேறி வந்துள்ளார். நூருலுக்கு … Read more

உக்ரைனை சேர்க்காமல் நடைபெறும் டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

கீவ், ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினை வருகிற 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘உக்ரைனின் பிராந்திய இறையாண்மையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தை மேஜையில் உக்ரைனின் … Read more

தாய்லாந்து: எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியதில் 9 பேர் காயம்

பாங்காக், தாய்லாந்து நாட்டின் நரதிவாத் மாகாணத்தின் சூ-காய் கோலக் மாவட்டத்தில் இருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு பாங்காக் நகரை நோக்கி சென்றது. அப்போது குருங்தெப் அபிவாத் என்ற பகுதியில் சென்றபோது, அந்த ரெயிலில் இருந்த 12 பெட்டிகளில, 10, 11 மற்றும் 12 ஆகிய 3 பெட்டிகள் தடம்புரண்டன. எனினும், அந்த பெட்டிகள் கவிழவில்லை. இந்த விபத்தில், 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் சிறுமி. 7 பேர் பெண்கள். ஒருவர் … Read more

உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி

கீவ்: உக்ரைன் தேசத்தின் அமைதிக்காக இன்று உக்ரைனுக்கும், மக்களுக்கும் ஆதரவு அளிப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி உள்ள ட்ரம்ப், தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல்வேறு உரைகளில் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேசி … Read more

குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

குரில் தீவுகள், ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று இரவு 7.33 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 49.94 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 162.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என … Read more