இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தேபோரா ராஸ் மற்​றும் ரோ கண்ணா தலை​மையி​லான அமெரிக்க எம்​.பி.க்​கள் 21 பேர் அதிபர் ட்ரம்​புக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகிலேயே மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா அமெரிக்​கா​வின் நெருங்​கிய கூட்​டாளி​யாக உள்​ளது. அமெரிக்க நிறு​வனங்​கள் செமிகண்​டக்​டர், சுகா​தா​ரம் மற்​றும் எரிசக்தி … Read more

அல்பேனியாவில் கோர்ட்டில் நீதிபதி சுட்டுக்கொலை

டிரானே, அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு கோர்ட்டு அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதியை நோக்கி சரமாரியாக சுட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகளால் துளைக்கப்பட்டு படுகாயமடைந்த நீதிபதி, சம்பவ இடத்திலேயே … Read more

ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது. இதுதொடர்பாக ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் … Read more

ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை-க்கு இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரிழவு தரும் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கவரக்கூடிய படைப்புக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது. ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை, சாட்டான்டாங்கோ என்ற தனது முதல் நாவலை 1985-ல் வெளியிட்டார். அதுமுதல் ஹங்கேரியில் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக இவர் … Read more

ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! நிறுவனத்தின் ஒற்றை தவறால்..இப்போ பல கோடிக்கு அதிபதி

Chile Man Got Salary 330 Times More : ஒரு ஊழியருக்கு, அவரது நிறுவனம் சம்பளத்தை தவறுதலாக அதிகமாக க்ரெடிட் செய்தது பெரிய ஜாக்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. இது குறித்த முழு தகவல், இதோ.

அந்தரங்க உறுப்பை காண்பித்து அத்துமீறிய ஆசிரியை…? அதிர்ந்த மாணவன் – பகீர் சம்பவம்

World Bizarre News: குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில், மாணவனிடம் வீடியோ காலில் தனது அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ்: அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, … Read more

காசா அமைதி திட்டம்: இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என … Read more

“கிரேட்டா தன்பெர்க் ஒரு நல்ல மனநல டாக்டரை பார்க்க வேண்டும்” – டிரம்ப் கிண்டல்

வாஷிங்டன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(வயது 22), பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை கிரேட்டா தன்பெர்க் கொண்டு சென்றார். அவருடன் … Read more

‘அமைதி அதிபர்’ – ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டிருந்த ட்ரம்ப், ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான … Read more