இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு – போலீசார் விசாரணை

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட … Read more

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

இஸ்லமபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை அவாமி … Read more

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3-4 நாட்கள் அவகாசம் வழங்கிய டிரம்ப்!

போர் நிறுத்தம் தொடர்பான 20 முக்கிய அம்சங்களுக்கான பரிந்துரைகளுக்கு பதில் அளிக்கவ் ஹமாஸ்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசம் அளித்துள்ளார். 

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர். குவெட்டாவில் உள்ள சர்குன் சாலையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தின் ஓரத்தில் சாலையை ஒட்டிய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த குண்டு வெடித்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் … Read more

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

குய்சோ: உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது. சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது. இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை … Read more

வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி

டாக்கா, வங்காளதேச நாட்டில் காக்ராசாரி என்ற இடத்தில் வசித்து வரும் மர்மா என்ற பழங்குடியின சமூகத்தின் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூட மாணவியான அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு மர்மா மற்றும் மோக் சமூக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் காக்ராசாரி பகுதியில் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பல்வேறு சாலைகளிலும் போராட்டம் … Read more

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவின் சினிமா தயாரிப்பு தொழில், பிற நாடுகளால் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் கைக்குள் இருக்கும் ‘மிட்டாய்’ திருடுவது போலத்தான் … Read more

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி

குவாங் டிரை, வியட்நாமில் புவலாய் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை புயல் கரையை கடந்தது. அப்போது, 26 அடி உயரத்திற்கு … Read more

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு: 2 மணி நேர பயணம் 2 நிமிடங்களாக குறைப்பு

பீஜிங், இன்றைய நவீன உலகில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. ஏனெனில் உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் சீனாவில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது குய்ஷோ மாகாணத்தில் புதிய பாலம் ஒன்றைக் கட்டி முடித்துள்ளது சீனா. இதன்மூலம் உலகின் உயரமான பாலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தப் … Read more

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை… போதை கும்பல் அட்டூழியம்

அயர்ஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது. அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். … Read more