900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

லண்டன், இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது. எனவே அந்த பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் … Read more

மாலியில் 40 எண்ணெய் டேங்கர்களை தாக்கி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்

பமாகோ, ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சி குழுவும் ஒன்று. இந்த கிளர்ச்சி குழுவானது மாலியில் எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி கயேசில் இருந்து தலைநகர் பமாகோ நோக்கி 100-க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் ராணுவ பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தன. அப்போது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 எண்ணெய் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் … Read more

வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களை வினியோகிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, வெனிசுலாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் சர்வதேச கடல் … Read more

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற அரபு – இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் … Read more

காசா மீதான ராணுவ நடவடிக்கை விரிவாக்கம்: பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

காசா, பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில், காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காசா நகரத்தின் மீது, நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் … Read more

‘நாய்’ என திட்டியதால் விபரீதம்.. தற்கொலை செய்த பெண் ஊழியர்.. ரூ.90 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்டு

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை ‘நாய்’ என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த … Read more

3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார் டிரம்ப்

லண்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 3 நாள் பயணமாக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கிறார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து-அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என்று ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. … Read more

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா

சியோல், கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை, அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை தூண்டுகின்றது. இதனை சமாளிக்க தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நடத்தக்கூடாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த பயிற்சி அவசியம் என தென்கொரியா கருதுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டுப்போர் பயிற்சி தென்கொரியாவின் ஜெஜு தீவில் … Read more

ஆங்கில சொற்களுக்கு தடை விதித்த வடகொரிய அரசு! இனிமே இப்படித்தான்..

North Korea Bans Hamburger Ice Cream : வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், சில ஆங்கில சொற்களுக்கு தடை விதித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் … Read more