King of Norway fitted with pacemaker in Malaysia | மலேஷியாவில் பேஸ்மேக்கர் பொருத்திய நார்வே மன்னர்

லங்காவி : இதய நோயால் பாதிக்கப்பட்டு மலேஷியாமருத்துவமனையில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்ட நார்வே நாட்டு மன்னர், 87, நேற்று நாடுதிரும்பினார். ஐரோப்பிய நாடான நார்வேயின் மன்னர் ஹெரால்ட், சமீபத்தில் தன் 87வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன் தொடர்ச்சியாக தன் குடும்பத்தினருடன் அவர் மலேஷியா நாட்டுக்கு சுற்றுலா சென்றார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வந்த மன்னருக்கு, சில நாட்களுக்கு முன், அங்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நோய் தொற்றுக்கு ஆளான அவர், லங்காவியில் … Read more

இந்தியா அறிவித்த தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். காஷ்மீரின் சுன்ஜ்வான் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி காஜா சாஹித் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டார். அதே மாதத்தில் லஷ்கர் கமாண்டர் அக்ரம் காஜி பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் கமாண்டர் அபு ஹன்சாலா கராச்சியில் கடந்தாண்டு டிசம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், யுனைடெட் … Read more

Shebaz takes office as Prime Minister of Pakistan for the 2nd time | பாக்., பிரதமராக 2வது முறை பதவியேற்கிறார் ஷெபாஸ்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், 72, இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய தேசிய சபைக்கு, 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். பொது தேர்தல் மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 70 இடங்களை பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள் தேர்ந்தெடுக்கும். … Read more

அமெரிக்கா: மாணவர்களை கால்களை முத்தமிட்டு, நக்க செய்த கொடூரம்; வைரலான வீடியோ

நியூயார்க், அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில், டீர் கிரீக் என்ற பள்ளி ஒன்று, ஒரு வார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கும் பணியானது நடந்துள்ளது. அவற்றில் ஒன்றாக, மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள். அதனை சக மாணவர்கள், தரையில் படுத்தபடி நாக்கால் நக்கி, சாப்பிட வேண்டும். இதில், 9 முதல் 12 வரையிலான … Read more

சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்

இஸ்லாமாபாத்: சமூக வலைத்தளங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக செனட் சபை உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பதால், அனைத்து சமூக ஊடக தளங்களையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டான் நியூஸ் தெரிவித்துள்ளது. “இளம் தலைமுறையினரை சமூக ஊடக தளங்கள் … Read more

48 மணி நேரத்தில் 37 பேர் பலி.. பாகிஸ்தானை மிரட்டும் கனமழை

பெஷாவர்: பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி 48 மணி நேரத்தில் மழை- நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் மாகாண பேரிடர் மேலாண்மை … Read more

அமெரிக்கா: 7 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்து… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

நியூயார்க், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. டெட்ராய்ட் நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் போலீசார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதில், அந்த அறையில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரருகே, துப்பாக்கி, போதை பொருட்கள் மற்றும் பல செல்போன்கள் கிடந்துள்ளன. உடனடியாக அவரை … Read more

மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை… சவூதி அரேபிய அரசு அறிவிப்பு

ரமலான் மாதம் (Holy month of Ramadan) முழுவதும், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் ரமலான் பண்டிகையை (Ramadan) முன்னிட்டு மசூதிகளில் இப்தார் விருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு – நாளை பதவியேற்கிறார்

இஸ்லாமாபாத்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேசிய சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார். … Read more