முடிவுக்கு வந்த இந்தியாவுடனான மோதல்: சவுதி பட்டத்து இளவரசருக்கு பாக். பிரதமர் நன்றி

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகம்மது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமருடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தகவல் … Read more

அமெரிக்க இனவெறி மனநிலையையே ட்ரம்ப் விதித்த ‘பயணத் தடை’ காட்டுகிறது: ஈரான்

தெஹரான்: ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ … Read more

209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்… – உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் – பாதிப்பு என்ன?

கீவ்: ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் … Read more

'காண்டம்' 200 ஆண்டுகள் பழசு… அதில் ஆபாச ஓவியமும் இருக்கு – சுவாரஸ்ய தகவல்கள்!

200 Year Old Condom: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறை குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சி

வாஷிங்டன்: ‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’. பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன் யூரோ மதிப்பில் ‘பராகுடா’ என்ற … Read more

‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் … Read more

சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் … Read more

‘புத்தி இல்லாதவர் உடன் பேச தயாராக இல்லை’ – மஸ்க் குறித்து ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப் வசம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

வங்காளதேசம்: 2026-ம் ஆண்டு ஏப்ரலில் பொது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. இவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பற்றிய விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால், பிரதமர் பதவியில் இருந்து விலகிய … Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் தொழிற்சாலை அழிப்பு

பெரூட், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று … Read more