‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் … Read more

சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் … Read more

‘புத்தி இல்லாதவர் உடன் பேச தயாராக இல்லை’ – மஸ்க் குறித்து ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப் வசம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

வங்காளதேசம்: 2026-ம் ஆண்டு ஏப்ரலில் பொது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. இவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பற்றிய விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால், பிரதமர் பதவியில் இருந்து விலகிய … Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் தொழிற்சாலை அழிப்பு

பெரூட், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று … Read more

வியட்நாமில் பைக் விபத்து: இந்திய மருத்துவ மாணவன் பலி

ஹனோய், ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவியர் பலர் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, தெலுங்கானா மாநிலம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அஷ்ரித் (வயது 21). இவர் வியட்நாமின் கென் தொ நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், அர்ஷித் நேற்று தனது நண்பருடன் கென் தொ நகரில் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை … Read more

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 3 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 198வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் … Read more

டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு … Read more

5 ரூபாய் Parle-G பிஸ்கட்… காசாவில் பல்லாயிரம் ரூபாய்… பசி கொடுமையிலும் கொள்ளை விலை!

Gaza Parle-G Biscuit: இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் Parle-G பிஸ்கட் தற்போது போரால் பாதிக்கப்பட்ட காசாவில் கொள்ளை விலையில் விற்கப்படுகிறது.

முடிவுக்கு வந்த ட்ரம்ப் – மஸ்க் நல்லுறவு: மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் – வின்’ (win – win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது. பொங்கி வழிந்த ‘ப்ரோமேன்ஸ்’ – … Read more