அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி: இந்தியாவில் எந்த துறைகளை பாதிக்கும்?

வாஷிங்டன், இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியால் இந்தியாவில் எந்த துறைகள் எல்லாம் பாதிக்கும் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு; ஆடை உற்பத்தி துறை, ஸ்மார்ட் போன்கள் , மருந்துப் பொருட்கள், கடல் உணவுப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சொல்வது … Read more

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிபர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்த … Read more

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.9 ஆக பதிவு

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.56 … Read more

இம்ரான்கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

இஸ்லமபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் – இ – இன்ஸாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து தகர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 185 பேர் … Read more

சுய இன்பம் செய்வதற்கு குட்டி பிரேக்… ஊழியர்களை மகிழ்விக்கும் நிறுவனம் – எதற்கு தெரியுமா?

Masturbation Break: ஊழியர்களுக்கு அரைமணி நேரம் சுய இன்பத்திற்கு என அரை மணிநேரம் இடைவேளை கொடுக்கும் நடைமுறையை ஒரு நிறுவனம் பின்பற்றி வருகிறது.

“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்

வாஷிங்டன்: “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரும்.” என்று கூறி ட்ரம்ப் … Read more

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை

சிட்னி, உலகிலேயே முதல் முறையாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், டிக்டாக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் யூடியூப் செயலிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த பட்டியலில் யூடியூப் செயலியும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு … Read more

நிலநடுக்கத்திற்கு முன்பே கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலங்கள்; வீடியோ வைரல்: காரணம் என்ன?

டோக்கியோ, ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி … Read more

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் … Read more

பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு…? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

நியூயார்க், ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது நீண்டகால விவாத பொருளாக உள்ளது. ஒருவேளை ஏலியன்கள் இருக்கும் என்றால், அவை உருவில், அளவில் எப்படி இருக்கும்? மனிதர்களை போன்ற வடிவை கொண்டிருக்குமா? அல்லது வேறு ஏதேனும் வடிவத்துடன் இருக்குமா? அவற்றின் சக்தி எந்தளவுக்கு இருக்கும்? என்பன போன்ற பல மர்ம முடிச்சுகள் அவிழாமல் உள்ளன. இந்நிலையில், பூமியின் மீது வருகிற நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி … Read more