இந்தியாவை நேரடியாக எச்சரித்த அமெரிக்கா! மாநாட்டில் நடந்தது என்ன?

Two state solution summit: இஸ்ரவேல்–பாலஸ்தீன் இடையே நீண்டகாலமாக நிலவும் பாபர் உரிமை மற்றும் எல்லை தகராறு தான் இந்த பிரச்சனையின் மையம். இந்த பிரச்சனைக்கு இரு-மாநில தீர்வு தேவை என உலக நாடுகள் முயற்சி செய்கின்றன. இந்த நோக்கத்தில் ஃப்ரான்ஸ், சவூதி அரேபியா இணைந்து ஒரு மாநாட்டை நியூயார்கில் நடத்தியது.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலை

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் பலி எண்ணிக்கை 60 ஆயிரம்

டெய்ர் அல்-பலா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் … Read more

மக்கள் தொகை சரிவால் சீனா கவலை: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முடிவு

பெய்ஜிங், உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது. தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை வேகமாக சரிந்ததால் சீனா கவலை அடைந்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை … Read more

அமெரிக்காவில் போயிங் ரக விமானத்தில் பழுது: அவசர அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதைக்கவனித்த விமானிகள், உடனடியாக வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விமானிகள் ” மே டே” அறிவித்தனர். மே டே என்பது விமானம் கடுமையான ஆபத்தில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் சர்வதேச அவசர அழைப்புச் சொல் ஆகும். மேடே அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தை உடனடியாக தரையிறக்க … Read more

உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் – 17 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 252வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா … Read more

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக மீண்டும் கூறும் டிரம்ப்

லண்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தன்னுடைய மனைவி விக்டோரியாவுடன் சென்று சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதல் நீடித்து வருவதால், காசாவில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க அமெரிக்கா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டார். இருவரும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 6 பெரிய போர்களை, தான் நிறுத்தி இருப்பதாக டிரம்ப் கூறினார். … Read more

தாய்லாந்து மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுகிறது: தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன. எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர். இந்த நிலையில், … Read more

நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் … Read more