Storm cancels 2,000 flights in US | அமெரிக்காவில் புயல் 2,000 விமானங்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிகாகோ: அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக, 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில், நேற்று முன்தினம் கடுமையான புயல் வீசியது. சூறாவளி காற்று மட்டுமல்லாது இடி, மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது; 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், கிரேட் லேண்டு மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கித் தவித்தனர். … Read more

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: சீனாவுக்கு பின்னடைவு ஏன்? – ஒரு பார்வை

தைபே: 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தைவானில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் சனிக்கிழமை … Read more

அரசியலில் முதன்முறை: ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட பெண்!

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கால்செரனின் இந்தப் பதவியேற்பு உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டோர் மத்தியில் நேர்மறையான செய்தியைக் கடத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. அதுவும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு மிதமாக இருப்போருக்கு இது நம்பிக்கை செய்தியாக … Read more

Compensation: திருநங்கைக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க யூடியூபர்க்கு உத்தரவிட்ட நீதிபதி

50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு  வழங்க வேண்டும் என்று நீதிபதி 

மன்னர் வம்சாவளி அல்லாத சாமானிய பெண்ணை கரம் பிடித்தார் புருனே இளவரசர்

புதுடெல்லி: “ஹாட் ராயல்” என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா (Abdul Mateen ibni Hassanal Bolkiah), தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (Yang Mulia Anisha Rosnah) திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புருனே நாடு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல் போல்கியா. இவரின் 10-வது மகனும், இளவரசருமான அப்துல் … Read more

ஹவுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: அழுத்தத்தைத் தொடர ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் அமெரிக்க முயற்சியின் முக்கிய இலக்காக ராடார் தளங்கள் உள்ளன” என்று தெரிவித்தனர். தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்களை … Read more

தைவானில் இன்று அதிபர் தேர்தல்

தைபே, சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அந்தப் பகுதியில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்- ஜே ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் தைவானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆர்வத்துடன் … Read more

வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மாஸ்கோ, 2019-ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வடகொரியாவும் தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020-ம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வடகொரியாவும் … Read more

மங்கோலியாவில் பனிக்குவியலில் கார் சிக்கியதால் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

உலன்பேட்டர் மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகள் என காணும் இடமெங்கும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்போது சாலையில் இருந்த பனிக்குவியலில் அந்த கார் … Read more