மனித மூளையில் சிப்… எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!

Neuralink Chip in Human Brain: பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, மூளையில் சிப் பொருத்தி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மூளையில் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், கம்ப்யூட்டர் மௌஸை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறி உள்ளது என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 

லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

டாக்கா, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர். ஐரோப்பாவுக்கு சென்று விட்டால் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரதிர்ஷ்டமே காத்திருந்தது. மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் … Read more

இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது – மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பெர்லின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தபோது, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு மத்தியில், இந்திய அரசு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “அனைத்து நாடுகளும் தங்கள் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பிற நாடுகளுடனான உறவை தொடர்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், ரஷியா … Read more

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

துபாய்: துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியாவில் … Read more

ரஷியாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை – உக்ரைன் பிரதமர்

டோக்கியோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், `ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட … Read more

லாட்டரியில் ரூ.2,800 கோடி வென்றவருக்கு பணம் தர மறுப்பு: தவறுதலாக இடம்பெற்றதாக விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6-ம் தேதி பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடி) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லாட்டரி நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்றுஅந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ். இதையடுத்து லாட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லாட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், … Read more

Procrastination in formation of government in Pakistan | பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 12 நாட்களாகியும் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து தெளிவு இன்றி இழுபறி நீடிக்கிறது. அந்நாட்டில் பிப்., 8ல் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பார்லிமென்டில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266ல் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. மீதமுள்ள 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் … Read more

5-ம் சுற்று பேச்சுவார்த்தையிலும் பலன் இல்லை.. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை. 133 இடங்களைக் கைப்பற்றினால் ஆட்சியமைக்க … Read more

வடகொரிய அதிபருக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த அதிபர் புதின்

சியோல், ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய … Read more

ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள்

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து … Read more