Balis $10 Tourism Tax For Foreigners Comes Into Effect: Heres What To Know | பாலி தீவிற்கு சுற்றுலா செல்ல வரி விதிக்கும் இந்தோனேஷியா அரசு: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு சுற்றுலா செல்பவர்கள், 10 அமெரிக்க டாலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் செல்லும் இடமாக பாலி தீவு முக்கிய இடம் பெறும். ஆஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இத்தீவு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அந்நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, சிங்கப்பூர், சீனாவைச் … Read more

Kerala couple with children mysteriously dies in US | குழந்தைகளுடன் கேரள தம்பதி அமெரிக்காவில் மர்ம மரணம்

கலிபோர்னியா : அமெரிக்காவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள், தங்கள் வீட்டில் நேற்று முன்தினம் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் சுஜித் ஹென்றி, 42, மற்றும் ஆலிஸ் பிரியங்கா, 40. மென்பொறியாளர்களான இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர். அங்கு, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ மற்றும் ‘கூகுள்’ ஆகியவற்றில் பணியாற்றிய ஆனந்த், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு … Read more

துபாயில் பிரதமர் உரைக்கு முன் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’

புதுடெல்லி: துபாயில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றுவதற்கு முன், அங்குள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’ என்ற வாசகங்கள் ஒளிர்ந்தன. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். பயணத்தின் 2-ம் நாளான நேற்று அபுதாபியில் பிரம்மாண்ட சுவாமி நாராயன் கோயிலை அவர் திறந்து வைத்தார். முன்னதாக துபாயில் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். … Read more

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

துபாய்: ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் … Read more

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அபுதாபி, இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு … Read more

We need a corruption-free government that is inclusive: Modi | அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசு தேவை: மோடி

துபாய், துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசுகள் தேவை. ‘சிறிய அரசு; பெரிய நிர்வாகம்’ என்ற தாரக மந்திரத்தை, 23 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேற்று முன்தினம் … Read more

கம்போடியாவில் தினமும் 4 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு

புனோம் பென், தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தேசிய எய்ட்ஸ் ஆணையம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 4 பேர் இந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். … Read more

‘இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி’ – அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். அப்போது இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டு அரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

மனிலா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி Related Tags : Philippines  Earthquake  பிலிப்பைன்ஸ்  நிலநடுக்கம்