உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா.

நியூயார்க்: கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிலிப் லாஸரினி என்ற ஐ.நா. பிரதிநிதி பகிர்ந்த பதிவில், “காசாவில் கடந்த 4 மாதங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல்வேறு மோதல்களில் உயிரிழந்த ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட … Read more

Democratic candidate Joe Biden: Conflict with Trump again? | ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கும் ஜோ பைடன்: மீண்டும் டிரம்ப் உடன் மோதல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் மோதுகின்றனர். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். பைடன் பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. இதனால் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக … Read more

பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 … Read more

பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் இன்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தபோது அந்த குடியிருப்பில் 11 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு … Read more

ரஷியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது- 15 பேர் பலி?

மாஸ்கோ: ரஷியாவின் மேற்கு பகுதியில் இன்று ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. விமானப்படை தளத்தில் இருந்து விமானம் டேக் ஆப் ஆன சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்தது. பின்னர் தீப்பற்றியது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். இவானோவா பிராந்தியத்தில் விமானம் விழுந்ததாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு … Read more

செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஏடன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்கு கப்பல்களையும் தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி … Read more

தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதை தடுக்கும் ‘வீட்டோ' அதிகார நாடுகள்: ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா விமர்சனம்

நியூயார்க்: ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதை தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கும்படி இந்தியாவும் அமெரிக்காவும் ஐநா பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. மும்பை தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 300 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தகைய தீவிரவாத சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரை … Read more

தொடரும் வன்முறை.. ராஜினாமா செய்ய முன்வந்த ஹைதி பிரதமர்

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் இருந்து தலைநகர் … Read more

Indian soldiers returning from Maldives | மாலத்தீவில் இருந்து திரும்பும் இந்திய ராணுவ வீரர்கள்

மாலே, மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு கடந்தாண்டு பதவி ஏற்ற பின், சீனாவுடனான நட்பை வலுப்படுத்த துவங்கினார். இந்தியா உடன் அந்நாடு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவப்படைப் பிரிவுகள், உதவிப் பணியாளர்கள் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானங்களை திரும்பப் பெறும்படி … Read more